கடவுளும் சைத்தானும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.  அப்போது நான் அதிகம் இணையத்திலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.  கடிதம் எழுதி நேரிலும் சந்தித்த பல  நண்பர்களில் ஒருவர் தயாநிதி.  இப்போது அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை.  அவரோடு மட்டும் அல்ல.  முக்கால்வாசிப் பேரோடு தொடர்பு இல்லை. கடவுளும் நானும் என்ற தொகுப்பைப் போல் கடவுளும் சைத்தானும் என்ற தலைப்பிலும்  என்னுடைய ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் … Read more

Adhan from Blue Mosque

இந்த அதான் – ஐக் கேட்டு விட்டுத்தான் உடனடியாக இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதிக்குக் கிளம்பினேன்.

தேர்தல் களம் – 1

திமுக தலைவர் ஸ்டாலின் மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.  காரணம், ஐந்து முறை முதல் மந்திரியாக இருந்த ஒரு தலைவரின் புதல்வரால் 66 வயது ஆகியும் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்பதால் ஏற்பட்ட உணர்வு.  அது மட்டும் அல்ல; ஓ. பன்னீர்செல்வம் 2001-இல் முதல்வரான போது அவர் பெயரே யாருக்கும் தெரியாது.  பின்னர், 2014-இல் முதல்வரான போது கூட அதுதான் நிலை.   தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட முதல்வராவதற்கு முன் அத்தனை பிரபலம் … Read more

கடவுளும் நானும் (1)

ஜனவரி ஆறாம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் அலுவலகத்தில் காலை பத்தரை மணி அளவில் அவரைச் சந்தித்தேன்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மேற்கத்திய இசையும் சூஃபி தத்துவமும் கொஞ்சம் இலக்கியமும்.  கிளம்பும் வேளையில்தான் அன்று அவரது பிறந்த நாள் என்றே தெரிந்தது.  என் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன்.  அந்த மூன்று மணி நேரமும் அவர் தன் மொபைலை எடுக்கவே இல்லை என்பதை கவனித்தேன்.  இத்தனை எளிமையான ஒரு மனிதரை என் … Read more

நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழத்தல்

இந்தியாவில் – அதிலும் மிகக் குறிப்பாக தமிழகத்தில் – நிறுவனங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.  இந்தியாவில் லஞ்சம் என்பது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட விஷயம். லஞ்சம் இல்லாத இடமே இல்லை.  ஆனால் லஞ்சத்தையே கட்டணம் மாதிரி வசூலிக்கும் போது அதை சீரழிவின் உச்சக்கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே எழுதியதுதான்.  சென்னை மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே சீருடை அணிந்த ஒரு போலீஸ் … Read more

பொள்ளாச்சி சம்பவங்கள் : சீரழிவின் அடையாளம்

ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி தன் முகநூல் குறிப்பில் இதை எழுதியிருக்கிறார்: ”சாரு இங்கே ஷார்ஜாவில் என் வீட்டிற்கு வந்திருக்கும்போது என் மகள்களை இரு வருடம் கழித்து இந்தியா சென்று படிக்க வைக்க இருக்கிறேன் என்று சொன்னேன்.. அவர் உடனே பதறி…ஏன் இங்கேயே இருக்கட்டும்..இந்தியா எல்லாம் வேணாம்னு சொன்னார்.. நான் உடனே, ஏன்ப்பா அப்படி சொல்றிங்க..என்ன இருந்தாலும் ஒரு நாள் இந்தியா வந்துதானே ஆகனும்னு சொன்னேன்.. அதற்கு நீங்க வேணும்னா வாங்க. பொண்ணுங்க இங்கேயே படிச்சு, இங்கேயே இருக்கட்டும்..இல்லைன்னா … Read more