மெதூஸாவின் மதுக்கோப்பை வெளிவந்து விட்டது…

ஃப்ரெஞ்ச் பெண்ணியவாதியான ஹெலன் சிஸூ காந்தி பற்றி ஐந்து மணி நேரம் நிகழ்த்தப்படக் கூடிய நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தியர்கள் பார்த்து, படித்து, விவாதிக்கப்பட வேண்டிய இந்த நாடகம் பற்றி இந்தியாவில் இதுவரை ஒரு வார்த்தை கூட யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மெதூஸாவின் மதுக்கோப்பையில் இந்த நாடகம் பற்றி விரிவாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மெதூஸாவின் மதுக்கோப்பை கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடைகளில் 350 ரூ. இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இன்னும் சில நாட்களுக்கு 250 ரூபாய்க்குக் கிடைக்கும். … Read more

தமிழின் சமகால எழுத்து…

என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார், தமிழின் சமகால எழுத்தை தான் படிப்பதில்லை என்று.  ஏனென்றால், என்னுடைய சக எழுத்தாளர்கள் யாரும் என்னைப் படிப்பதாக/படித்ததாகத் தெரியவில்லை.  அப்படியிருக்கும் போது நான் ஏன் அவர்களைப் படிக்க வேண்டும்?  இதே கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கிறது.  தன் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி என்னைக் கேட்பவர்கள் என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களையோ, ராஸ லீலாவையோ, எக்ஸைலையோ, காமரூப கதைகளையோ படித்திருக்கிறார்களா?  இல்லையெனில் நான் ஏன் அவர்கள் எழுதுவதைப் படிக்க வேண்டும்?  … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை – முன்பதிவுத் திட்டம்

https://www.youtube.com/watch?v=RR-qivi9xeI மேலே உள்ள இணைப்பு மெதூஸாவின் மதுக்கோப்பை என்ற என்னுடைய புதிய புத்தகம் பற்றி நான் பேசிய காணொளி.  இதுவரை ரெண்டாயிரத்து சொச்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  இதுவே ஏதாவது சினிமா விவகாரம் என்றால் மூணு நாளில் மூணு லட்சம் தாண்டும்.  உங்கள் புத்தகங்களிலேயே நீங்கள் அதிக சிரமம் எடுத்து எழுதிய நூல் எது என்று கேட்டால் பழுப்பு நிறப் பக்கங்கள் 3 என்று சொல்வேன்.  ஆனால் உங்கள் புத்தகங்களிலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த புத்தகம் எது என்று … Read more