சினிமா பயிற்சிப் பட்டறை

வரும் ஞாயிறு அன்று ப்யூர் சினிமா பயிற்சிப் பட்டறையில் ஒளிப்பதிவு பற்றி பயிற்சி அளிக்கலாம் என்று இருக்கிறேன். குறிப்பாக த்ரில்லர் மற்றும் horror படங்களில் ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் வரும் ஞாயிறு அன்று பயிற்சி. ப்யூர் சினிமாவில் 50 பேர் அமரலாம். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு வரை. சினிமா ரசனை பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறை. 500 ரூ கட்டணம். தொடர்புக்கு: 9840644916, 044 4865 5405.

சில புதிய புத்தகங்கள்

திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு : https://tinyurl.com/budle-nadodi-thisai திசை அறியும் பறவைகள் மட்டும் தேவையென்றாலும் முன்பதிவு செய்யலாம். 350 ரூ. விலை உள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 250 ரூபாய்க்குக் கிடைக்கும். தொடர்புக்கு: https://tinyurl.com/nadodiyinnaatkuripu நாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் … Read more

நல்ல சினிமா உருவாக என்ன செய்யலாம்?

Film appreciation ஐப் பொறுத்தவரை என்னுடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. மேற்குத் தொடர்ச்சி மலை நல்ல சினிமா இல்லை; ஆனால் எட்டுத் தோட்டாக்கள் ஒரு நல்ல பொழுது போக்கு சினிமா. எப்படி? அதேபோல் உலக சினிமாவை எடுத்துக் கொண்டால் வெறுமனே ஈரான் சினிமா, குரஸவா என்று மட்டுமே கதைத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. இல்லாவிட்டால் இண்டலெக்சுவல்களைப் போல் பெர்க்மன் பெர்க்மன் பெர்க்மன் என்றே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் பலவிதமான genreகள் உள்ளன. ஹொடரோவ்ஸ்கியின் சினிமாவும் சினிமா … Read more

கதை – சினிமா – ரசனை – பயிற்சிப் பட்டறை

சாரு நிவேதிதாவின் கதை – சினிமா – ரசனை – பயிற்சிப்பட்டறை 30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை. நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய் பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாகக் கண்டடையலாம். … Read more

பரியேறும் பெருமாள் – தமிழ் சினிமாவில் ஒரு அற்புதம்

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் கதை சொல்லும் முதல் தமிழ்ப் படம். தலித் அழகியலை முன்வைக்கும் முதல் படமும் கூட. ஆனால் பிரச்சாரம் இல்லை. கலைப் படம் என்ற பாவனை இல்லை. ஒரு நொடி கூட அலுப்புத் தட்டவில்லை. ஒரு அற்புதமான உலகத் தரமான படம் பார்த்த திருப்தியைத் தந்தது பரியேறும் பெருமாள். இயக்குனர் மாரி செல்வராராஜ். உனக்கு என் அன்பான முத்தங்கள்