Notes from Madras – 9

“Life in contemporary India is dangerous, fundamentalist and frequently recalls the darkest days of Europe’s recent past. Charu Nivedita sounds the alarm.” From ArtReview Asia, Summer 2018 issue. Please see p.no. 35 and 36. https://artreview.com/magazine/2018-2006/artreview_asia_summer_2018/

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு

நேற்று ரெய்ன் ட்ரீ மொட்டை மாடியில் சில நண்பர்களுடன் அரட்டை.  அப்போது ஒரு நண்பர் ஜெயமோகனின் வெண்முரசு தனக்குப் பிடித்தமான படைப்பு என்று சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனென்றால், அவர் பின்நவீனத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  விளிம்பு நிலைப் பகுதி பற்றி எந்த வித ‘இலக்கியப்’ பூச்சுகளும் இல்லாமல் எழுதுபவர்.  விளிம்பு நிலை மாந்தர் பற்றி எக்கச்சக்கமான ரொமாண்டிக் ஜிகினாக்களுடன் எழுதிய ஆள் ஜி. நாகராஜன் என்று மதிப்பீடு செய்கிறேன்.  அந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன்.  நண்பரிடம் … Read more

Sacred Games

24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி? 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். அதில் மூன்று சின்ன குட்டி. நேற்று இரவு உணவு போட மறந்து போனேன். காலையில் எழுந்து வாக்கிங் கிளம்பின போது எட்டு பூனைகளும் என் கால்களைச் சுற்றிக் கொண்டன. வீட்டைப் பூட்டி சாவியை உள்ளே எறிந்து விட்டேன். மணி அப்போது ஆறு. எக்காரணம் கொண்டும் … Read more

திசை அறியும் பறவைகள்

இந்தக் குறிப்பில் உள்ள இணைப்புகளைக் காண முடியாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  புரியாது. இந்த உலகின் அதியற்புத நடனங்களில் ஒன்று, த்தாங்கோ (Tango).  த்தாங்கோவைப் பார்க்கும் போது இதற்கு இணையான நடனமே இல்லை என்று தோன்றும்.  த்தாங்கோ, ஸால்ஸா இரண்டைப் பற்றியுமே 20 ஆண்டுகளுக்கு முந்தைய என் கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  எக்ஸைல் நாவலிலும் அது உண்டு.  த்தாங்கோ அர்ஹெந்த்தினாவில் மிகப் பிரசித்தம்.  புவனோஸ் அய்ரஸின் தெருக்களிலேயே த்தாங்கோவை ஆடிக் கொண்டிருப்பார்கள்.  கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள். … Read more

புனைவும் வாழ்வும்

நன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018 தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் புத்தகங்களிலும் அப்பட்டமாக உதிரி உதிரியாக உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். காந்தியின் சத்திய சோதனை மாதிரி உங்கள் சுயசரிதையை நேரடியாகவே எழுதினால் என்ன? யாழினி பார்வதம், சென்னை ஓர் எழுத்தாளர் தன் வாழ்வையம் புனைவையும் கலந்ததான் எழுத முடியும். இதை நான் மட்டுமே முதல் முதலாகச் செய்யவில்லை. நமது முன்னோடிகளான க.நா.சு., சி.சு. செல்லப்பா, … Read more

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்

நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது.  அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது.  இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும்.  சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது.  … Read more