சூழல்

அடிக்கடி எனக்கு யாராவது நீ வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் என்று ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. நான் ஃப்ரான்ஸ் என்றே நினைத்துக் கொண்டு விடுகிறேன். பாரிஸில் வசித்த மிஷல் வெல்பெக்கை (Michel Houellebecq) ஒருமுறை பேட்டி காண்பதற்காக பிபிசி நிறுவனத்திலிருந்து வந்து பார்த்தார் ஒரு இளம் பெண். என்னுடன் படுப்பதாக இருந்தால் பேட்டி அளிக்கிறேன் என்றார் வெல்பெக். ஒரு நாகரீகமான சமூகத்திலிருந்து வந்த அந்தப் பெண் மிரண்டு போய் ஓடி விட்டார். அது பெரிய செய்தியாகவும் வந்தது. வெல்பெக்கை சமூகம் … Read more

அரைகுறை அரசியல் பார்வை – ரஜினி – ரஞ்சித் – தலித் அரசியல் : அராத்து

முன்பே எழுத நினைத்திருந்ததுதான். எழுதி இருந்தால் ,காலா வெற்றியால் (!) பொறாமை கொண்டு எழுதியதாக சொல்வார்கள். எரியுதா எரியுதா என்று கேட்டு விட்டு ஓடிவிடுவார்கள் என்பதால் , காலா தன் வெற்றிப்பயணத்தை முடித்த பின் எழுதுகிறேன். தமிழ் நாட்டில் இன்றும் , தலித் ஓட்டு வங்கியை அதிகம் வைத்திருக்கும் கட்சி அதிமுக. அதற்காக அதிமுக தான் தலித்திற்கு அதிகம் செய்த கட்சியா என்றால் இல்லை. எல்லாம் எம்ஜிஆர் என்ற கவர்ச்சிதான். நரிக்குறவர் ஓட்டு வங்கியும் இரட்டை இலைக்குத்தான். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – இரண்டாம் பாகம்

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டாம் பாகம் மகா பெரிய வெற்றி. 450 பேருக்கு நான் கையெழுத்துப் போட்டு விட்டேன். ஆனால் அதைப் பார்சல் கட்டுவதற்குள் காயத்ரியும் ராம்ஜியும் படாத பாடு பட்டு விட்டார்கள். அவர்களேதான் ஆபீஸ் பாய் ஆபீஸ் கேர்ள், க்ரியேட்டிவ் எடிட்டர்ஸ், சேல்ஸ்மென், சேல்ஸ்வுமன் எல்லாமே என்று எழுதியிருக்கிறேன். வரும் காலத்தில் ZDP ஒரு கார்ப்பொரேட் அலுவலகத்தைப் போல் மாற வேண்டும் என்பது என் ஆசீர்வாதம். நிச்சயம் நடக்கும், விரைவில். … Read more

பிறந்த நாள்…

இன்று முதல்முதலாக போனை வீட்டில் வைத்து விட்டுப் போய் விட்டேன்.  வந்து பார்த்த போது ஏகப்பட்ட அழைப்புகள்.  அதில் ஒன்று கோவை நண்பர்.  அழைத்தேன்.  என்ன சார், பேசவே முடில, போனையே எடுக்க மாட்டேங்கிறீங்க என்றார்.  என் நெருங்கிய நண்பர்கள் யாரும் கேட்காத கேள்வி.  கேட்கவும் கூடாத கேள்வி.  நண்பர்கள் ஒவ்வொருவரின் அழைப்பையும் ஏற்று நான் பேசிக் கொண்டிருந்தால் அப்புறம் நான் எழுதவே முடியாது ஐயா.  இந்த எழுத்துக்காக நான் என் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தியாகம் செய்து … Read more

அராத்துவின் கிண்டில் விற்பனை

Araathu’s post in FB கிண்டில் பண வரவு குறித்து….. இதுவரை எந்த பதிப்பகத்தில் இருந்தும் நான் ராயல்டி பெற்றதில்லை. ராயல்டி எதிர்பார்த்து நான் புத்தகங்களை பதிப்பிக்க கொடுக்காததால் எனக்கு எந்த புகாரும் இல்லை. மார்ச் 19 அன்று உயிர்மெய் கிண்டிலில் வெளியிட்டேன்.மார்ச் 31 வரை அமேசான் கொடுத்த தொகை – 8500 /- ஏபரல் – 10,000 /- மே – 9,000/- மாதா மாதம் இந்த பணம் தொடராது. உயிர்மெய் ஹாட்டாக இருக்கும் வரைதான்.ஜூன் … Read more

ரெண்டாம் ஆட்டம் in kindle

கீழே வருவது ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகப் புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரை.  சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நானும் நண்பர்களுமாக ஒரு நாடகம் போட்டோம்.  நாடகத்தின் பெயர் ரெண்டாம் ஆட்டம். அது நடந்து கொண்டிருக்கும் போதே நானும் நடிகர்களும் தாக்கப்பட்டோம்.  நண்பர்கள் என் பாதுகாப்புக்கு வந்திருக்கவில்லை என்றால் சஃப்தர் ஹஷ்மியைப் போல் கொன்றே போட்டிருப்பார்கள்.  ஆனால் ஒரு அடிப்படையான வித்தியாசம்.  ஹஷ்மி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில அடிதடி … Read more