ஃப்ரான்ஸும் நானும் – 7

பசி கடவுளின் அருளைப் பெற்றது. பசியைப் பேசுபவன் ஞானி. பசியைப் போக்குபவன் வள்ளல். சமூகம் அவர்களைப் போற்றுகிறது. ஆனால் காமம் தீர்ப்பவள் வேசி. அவள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். இப்படியாக, ஆண்டாண்டு காலமாக காமத்திற்கு ஒரு சாபம் இருந்து வருகிறது. பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிபடுகிறான். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/05/1496601017 ‘Oedipus the King’ இணைப்பு: http://abs.kafkas.edu.tr/upload/225/Oedipus_the_King_Full_Text.pdf  

டச் வுட்

உப்புக் கருவாடு என்ற படத்தின் முதல் காட்சியின் போதுதான் ராம்ஜி நரசிம்மனைப் பார்த்தேன்.  பக்கத்தில் இயக்குனர் ராதா மோகன்.  ராம்ஜி பற்றி ஏற்கனவே காயத்ரி மூலம் அறிந்திருந்தேன்.  ஒருபோதும் அவரிடம் பழகி விடக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  காரணம், அவர் ஒரு தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர்.   அந்த இரண்டு தொழில்களிலும் இருப்பவர்கள் மீது நமக்கு ஒரு மன பிம்பம் இருக்கிறது அல்லவா, அதுதான் அப்படி நான் நினைத்ததற்குக் காரணம்.  அதனால் கொஞ்சம் ’தள்ளியே’ நின்று பேசினேன்.  படம் எப்படி … Read more