கோபி கிருஷ்ணனும் வரம்பு மீறிய பிரதிகளும்

என்னுடைய கட்டுரைகளில் அவ்வப்போது கோபி கிருஷ்ணன் பற்றிக் குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். தமிழில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர்கள் நகுலன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன். இதில் அசோகமித்திரனைத் தவிர மற்ற மூன்று பேருடைய எழுத்துக்கும் என்னுடைய எழுத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதிலும், கோபியும் நானும் கிட்டத்தட்ட க்ளோன் பண்ணிய ஆடுகள் மாதிரி. தமிழில் transgressive fiction-ஐ அவரும் நானும் சேர்ந்தே எழுதினோம். என்னுடைய 12 ஆண்டு தில்லிவாசத்தை முடித்துக்கொண்டு 1989ஆம் ஆண்டு சென்னை … Read more

கலையும் போலியும்

மாதொருபாகன் சர்ச்சை பற்றிய சாருவின் புதிய நூல், கலையும் போலியும் கிண்டிலில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். கலையும் போலியும்: மாதொருபாகன் சர்ச்சை (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PK3KT56/ref=cm_sw_r_cp_apa_i_CiBGCbEJWY97F

மூன்று கிண்டில் புத்தகங்கள்

தமிழ்ச் சமூகத்துக்கும் எழுத்துக்கும் என்றைக்குமே தகராறுதான்.  சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களிடம் பிச்சை எடுத்த கதையையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கிறது – சரி, உள்ளதுதானே என்று.  ஆனால் என் நண்பர்களின் உதவியால் கடந்த பத்து ஆண்டுகளாக நான் அந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்தேன்.  இப்போது ஜனவரி முதல் தேதியிலிருந்து பண வரத்து நின்று போனதால் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை.  வீட்டு ஓனர் செட்டியார் வந்து … Read more

ஹௌல் மற்றும் சில கவிதைகள்…

தமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது.  பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம்.  பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது.  ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன்.  இந்தக் … Read more

மாபெரும் நாடகம்

Peter Paul Rubens நானொரு மாபெரும் நாடகத்தை நடத்தத் திட்டமிட்டேன் நடிகர்களை உருவாக்கினேன் கலை இயக்குனரை அழைத்து செட் பற்றி விளக்கினேன் எல்லாம் நிஜத்தைப் போலவே இருக்க வேண்டும் என்றேன் மரம் செடி கொடி நிலா நட்சத்திரம் கோட்டை கொத்தளம் குளம் கடல் மீன் பறவை யானை குதிரை கழுதை புழு பூச்சி ஏரி காடு எரிமலை பாலை பாறை மண் கல் வயல் நதி நீர்வீழ்ச்சி காற்று புயல் மழை அக்கினி போலீஸ் ஸ்டேஷன் பாராளுமன்றம் … Read more