அந்திமழை

இம்மாத அந்திமழை அச்சு இதழில் தன்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்கள் பற்றி சாருவின் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 3)

சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே? அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன். http://bit.ly/1VFWyIP

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 2)

சி.சு. செல்லப்பா, க.நா.சு.வின் அடிச்சுவட்டில் தீவிரமான இலக்கியம் ஏகப்பட்ட சிறுபத்திரிகைகளின் மூலம் வளர்ந்துகொண்டிருந்த நிலையில் சுஜாதா என்ற ஒரே மனிதரின் அசுர பலத்தினால் வெகுஜன எழுத்துக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது. *** அகிலனுக்கு ஞான பீடம் கிடைத்தது பற்றி சு.ரா.: “அகிலன் பரிசு பெற்றதைப் பத்திரிகைச் சக்திகளும் சக கேளிக்கையாளர்களும் கொண்டாடுவது இயற்கையான காரியம். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது. சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்று மற்றொன்றைத் … Read more