கோவா சந்திப்பு

மார்ச் 23ஆம் தேதியிலிருந்து 27 காலை வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) கோவாவில் இருப்பேன். அராத்துவும் இருப்பார். எங்காவது கடல் ஓர கிராமத்தில் தங்கலாம் என்று யோசிக்கிறேன். ஹைதராபாத் சந்திப்பு பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன. நேரம் இல்லை. பல வேலைகளை ஒன்றாகப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். ஹைதாராபாதில் நிகழ்ந்த சந்தோஷங்களில் சில: நண்பர் பிரபு ராமை பதின்மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்தது. புதிய நண்பர்களான கணபதியையும், இன்பராஜையும் சந்தித்தது. கோவாவில் என்னைச் சந்திக்க … Read more

நண்பகல் நேரத்து மயக்கம்

என் நெருங்கிய நண்பர்கள் பலர் சிபாரிசு செய்ததாலும் அங்கமாலி டயரீஸ் படத்தின் இயக்குனர் என்பதாலும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் பார்த்தேன்.  குப்பை என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.  இந்தப் படத்தைப் பாராட்டுபவர்களுக்கு fake சினிமாதான் பிடிக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  இந்தப் படத்தை இயக்கியவர் மீது எனக்கு வருத்தமே இல்லை.  இதைப் பார்த்துப் பாராட்டுபவர்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.  அவர்கள் விஜய் ரசிகர்களை விட கீழான சினிமா ரசனையில் … Read more

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-lumpenism

பூச்சி 1 & 2: இரண்டு புதிய புத்தகங்கள்

மிக அலுப்புடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். இரண்டு புதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பூச்சி -1, பூச்சி-2. இரண்டுமே முழுமையான புனைவுக்கும் முழுமையான அ-புனைவுக்கும் இடையிலான புதிய வகை ஆக்கங்களைக் கொண்டவை. இரண்டையும் செப்பனிடுவதற்குப் பல நாட்களை, பல மணி நேரத்தை செலவு செய்திருக்கிறேன். ஆனாலும் நூறு பிரதிகள் விற்றால் பெரிது. இதற்கு முன் வரம் என்ற நூல் வந்தது. எத்தனை பிரதிகள் விற்றது என்று கூட நான் பதிப்பாளரிடம் கேட்கவில்லை. ஐம்பது என்று பதில் வரும். … Read more

வரங்களால் நிறைந்தவன்

ஹைதராபாதிலிருந்து திரும்பவும் கூடு அடைந்து விட்டேன்.  திரும்பவும் சாப்பாட்டுப் பிரச்சினை தொடங்கி விட்டது.  வீடு இப்போது கூட்டுக் குடும்பமாகி இருக்கிறது. எட்டு மாசப் பொடிப்பயல் வேதா, என் மகன் கார்த்திக், மருமகள் அனு, அவந்திகா, செவிலி நிர்மலா.  கார்த்திக்கும் அனுவும் எங்கள் குடியிருப்பின் நேர் மேலே உள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.  பொடியன் எங்களுடன் இருப்பதால் நிர்மலாவும் எங்களுடனேதான்.  இது தவிர மேல் வீட்டை சுத்தம் செய்ய ஒரு பணிப்பெண்.  எங்கள் வீட்டை சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் … Read more

எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-writings