கவிஞர் ஆசையின் உலக சாதனைக்கு வாழ்த்துக்கள்

கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன். இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, … Read more

சலுகை விலையில் புத்தகங்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நாளையும் (14 ஃபெப்) நாளை மறுநாளும் முப்பது சதவிகிதத் தள்ளுபடியின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களுக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1

ஒரு வரலாற்றுத் தருணம்

சென்னையில் நடந்த ஹிந்து இலக்கிய விழா, கோழிக்கோடு இலக்கிய விழா, ஜெய்ப்பூர் இலக்கிய விழா, திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமி இலக்கிய விழா நான்கும் முடிந்து விட்டது.  நாளை சென்னை வந்து விடுவேன்.  விழாக்கள் பற்றி சில தினங்களில்  எழுதுகிறேன்.  என்னைப் பற்றிய ஆவணப்படம் தெ அவ்ட்ஸைடர் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது.  ஆனாலும் அதில் இரண்டு விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.  ஒன்று, சீலே.  இரண்டு, பாரிஸ்.  அதன் பொருட்டு வரும் மார்ச் இறுதியில் நானும், நண்பர்கள் குமரேசன், … Read more

நாளை இரவு எட்டு மணி சந்திப்புக்கான லிங்க்

ஏற்கனவே எழுதியபடி அது ஸூம் சந்திப்பு அல்ல. கூகிள் மீட். அதற்கான இணைப்பு கீழே: To join the meeting on Google Meet, click this link:  https://meet.google.com/grn-afri-dfr  Or open Meet and enter this code: grn-afri-dfr

the relevance of postmodern narrative

நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழா

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் … Read more