பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு

சில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். … Read more

ஊரின் மிக அழகான பெண் – kindle edition

1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது.  அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன்.  பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன்.  லைப்ரரி மற்றும் மண்டி ஹவுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள்.  அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம்.  1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று.  கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன்.  … Read more

இசைக் கடவுளின் நிலவின் ஒளி…

நீ எழுதிய கவிதையை உனக்கே பரிசளிக்கிறேன்; கூடவே இசைக் கடவுளின் நிலவின் ஒளியையும்… https://www.youtube.com/watch?v=4Tr0otuiQuU நீ வளர்ப்புப் பிராணிகளைக் கையாளும்போது எப்படியோ அவற்றின் உலகங்களில் நுழைந்துவிடுகிறாய் அவற்றின் மொழிகளை நீ அறிந்துகொண்டு விடுகிறாய் ஒரு பறவையை நீ கைகளில் எடுத்துக்கொள்ளும்போது எப்படி பற்றிக்கொண்டால் அவை ஒரு ஆகாயத்தில் நீந்துவதுபோல உணருமோ அந்த இடத்தில் சரியாக உன்னால் பற்றிக்கொள்ள முடியும் ஒரு நாய்க்குட்டியை நீ லாவகமாகத் தூக்கி் சுழற்றும்போது அது பதட்டமடைவதில்லை அது புதர்களில் ஒரு முயலைத்தேடி உற்சாகமாகத் … Read more

நிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில்…

ஸீரோ டிகிரி வந்த புதிது.  அப்படி ஒரு எழுத்து முறை 2000 ஆண்டுத் தமிழுக்குப் புதிது.  யாருடைய கற்பனைக்கும் எட்டாதது.  அப்படி ஒரு புரட்சியை இப்போது என்னால் கூட கற்பனை செய்ய முடியாது; எழுத முடியாது.  அந்த நாவல் வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது அன்பு மிகக் கொண்ட நண்பர் சிலர் தான் தான் அந்த நாவலை எழுதிக் கொடுத்ததாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்கள்.  சுமார் ஆறு பேர் அப்படிச் சொன்னார்கள்.  அது பற்றி என்னைக் … Read more

To Be or Not To Be

பொதுவாக நான் மேடையில் பேசுவதை யூட்யூபில் மீண்டும் கேட்க மாட்டேன். பிடிக்காது. தமிழருவி மணியனைப் போல், வேளுக்குடி கிருஷ்ணனைப் போல், எஸ். ராமகிருஷ்ணனைப் போல் பேச முடியாததால் என் பேச்சு எனக்குப் பிடிக்காது. என்னுடைய உடல் மொழி, அசைவுகள், குரல் எதுவுமே எனக்குப் பிடிக்காது. அதன் காரணமாகவும் என் பேச்சை நான் கேட்பதில்லை. கேட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஏப்ரல் 8, 2018 அன்று ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் பேசிய பேச்சை நான் பலமுறை … Read more