எனக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர்

உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர் யார் என்று நண்பர் ஒருவர் கேட்டார்.  அவர் கேட்டது கவிஞர்களை அல்ல;  கவிஞர்கள் என்றால் சிலர் பெயரைச் சொல்லியிருப்பேன்.  அவர் கேட்டது, உரைநடை.  சல்மாவை இன்னும் படித்ததில்லை.  விரைவில் படிப்பேன்.  வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது.  ஒரு பழைய பெண் எழுத்தாளரை வெறுக்கவே செய்கிறேன்.  இந்த நிலையில் உங்களுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் என்று நண்பர் கேட்ட போது லுலு தேவ ஜம்லா என்றேன்.  யார் என்றார்.  முகநூலில் அவர் … Read more

கதாநாயகன்

தப்பு எம்மேல தான்; எம் புத்திய செருப்பால அடிச்சுக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல.  அந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்து விட்டேன்.  நாய் வேஷம் போட்டாச்சு.  குரைக்காமல் இருக்க முடியுமா?  படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு உணர்ச்சி வேகத்தில் – இப்படியெல்லாம் நம் வாழ்க்கை சீர்கெட்டுப் போச்சே என்ற சுய பரிதாபத்தில் மாலின் நாலாவது மாடியில் ஏறி விழ முயற்சித்தேன்.  என்னைத் தடுத்தாட்கொண்டு வீட்டில் கொண்டு வந்து விட்ட நண்பருக்கு என் நன்றி. சின்னப் … Read more

மதுரை உரை

சாரு, மதுரை உயிர்மை விழாவில் உங்கள் உரையை ஷ்ருதி டிவியில் பார்த்தேன். பொதுவாக, உங்கள் எழுத்தைத்தான் உன்மத்தம், பித்த நிலை என்றெல்லாம் சொல்வார்கள். முதன்முறையாக, இந்த உரையைக் கேட்கும்போது அவ்வாறு தோன்றியது. சாமி வந்தது போல் பேசியுள்ளீர்கள் (like in a trance). It was unadulterated, naked, pristine. சொல்ல சரியான வார்த்தை என்னிடம் இல்லை. பத்து வருடங்கள் முன்னமே, கவிதையைப் பற்றி ‘மொழியின் கருவூலம்’ என்று எழுதியுள்ளீர்கள். இந்த உரையிலும் அந்தக் கருத்தை சொல்லியுள்ளீர்கள். … Read more

விவேகம் விமர்சனம் தொடர்பாக தி இந்து

தி இந்து வெளியான முதல் நாளிலிருந்து அதன் வாசகனாக, அதைப் பலரிடமும் சிபாரிசு செய்பவனாக இருந்து வருகிறேன்.  காரணம், தமிழ்ச் சமூகம் அறியாத, அறிய விரும்பாத தமிழ் எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறது தி இந்து என்பதால்.  மேலும் அதில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன.  இந்த நிலையில் என்னுடைய விவேகம் விமர்சனம் தொடர்பாக எனக்குக் கொலை மிரட்டலும் மற்ற பல வசைகளும் வந்ததால், அதுவும் அந்த நபர்கள் … Read more