அன்பின் பிரார்த்தனை (2)

அன்புள்ள சாரு, சாரு ஆன்லைனில் ”அன்பின் பிரார்த்தனை” படித்தேன். பதறிவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். இன்னும் நடுக்கம் குறையவில்லை எனக்கு. அடிப்படையில் வெறுப்பிற்கு எதிரான எதிர்வினையாகத்தான் அதை எழுதினேன். மிகவும் சாதாரண நெகிழ்ச்சிக் கட்டுரை ஒன்றில் ‘உங்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது’ என்று ஜெமோவுக்கு ரியாஸ் அஹமது சொல்லியிருந்ததை ”இன்று இந்த மனநிலையை கணிசமான இஸ்லாமியரிடம் காணமுடிகிறது” என்று அதை வெறுப்பு மனநிலையாக மாற்றியிருந்தார். இதற்கு பதில் சொல்லும் முகமாக ”நான் அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதக்கூடியவன்” என்றெல்லாம் ரியாஸ் பதில் சொல்லியிருந்தார். … Read more

அன்பின் பிரார்த்தனை

”நான் வெறுக்கும் பலரைப்போல் ஜெயமோகனையும் வெறுக்கிறேன். அவரை வெறுக்க எனக்குக் காரணங்களே தேவைப்படவில்லை. ஆயினும் நான் அவரை வெறுக்கிறேன். எந்த அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் எழுதியோ கண்டனத்தைப் பதிவு செய்தோ என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. காதலிப்பதைப்போல வெறுப்பதும் எனக்கு அந்தரங்கச் செயல்பாடு. ஏன் வெறுக்கிறாய் என்று கேட்பதும், காரணங்களை நீங்களே கற்பித்துக் கொண்டு இதற்காகத் தானே என்று என்னிடம் உறுதிப்படுத்த முயல்வதும் என் மீது நீங்கள் பிரயோகிக்கும் வன்முறை.” மேற்கண்ட குறிப்பை என் பிரியத்துக்குரிய … Read more

ஒரு சிறிய ஐரோப்பியப் பயணம்

வழக்கமாக இந்த நேரத்தில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடித்து விட்டு மஹாமுத்ராவில் காஃபி குடித்துக் கொண்டிருப்பேன்.  அல்லது, அதையும் முடித்து விட்டு பாபா கோவிலின் வெளியே நின்று கொண்டிருப்பேன்.  தேகத்தில் வியர்வை ஆறாய்ப் பெருகி ஊற்றிக் கொண்டிருக்கும் என்பதால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக உள்ளே செல்வதில்லை.  நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது.  தினமணி தொடருக்கு எழுதுவதற்காக ஒரு தமிழ் நாவலைப் படிக்க எடுத்தேன்.  முடித்த போது வெள்ளி முளைத்து விட்டது.  இப்படிப் படித்து பல காலம் … Read more

குலசாமியைக் கொன்றவன்

சல்மான் கான் பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.  மற்றபடி தினசரிகளையோ வாராந்தரிகளையோ படிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.  எல்லா நேரத்தையும் புத்தக வாசிப்பே எடுத்துக் கொண்டு விடுகிறது. சல்மான் விஷயமாக தினசரிகள் பக்கம் போனபோது விகடன் கண்ணில் பட்டது.  எடுத்துப் புரட்டிய போது கணேச குமாரன் எழுதிய சிறுகதை குலசாமியைக் கொன்றவன்.  எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால் படித்தேன்.  கதை உலகத் தரம்.  இப்படி ஒரு சிறுகதை படித்து நீண்ட காலம் ஆகிறது.  இந்த வார … Read more

உத்தம வில்லன் (மீண்டும்)

சாரு, உத்தம வில்லன் மதிப்புரை அட்டகாசம். அஞ்சு முறையாவது ரசித்து படித்தேன். ரசித்தது உத்தம வில்லனைப் பற்றிய மதிப்புரையை அல்ல, உங்கள் எழுத்தின் அழகியலை. இதைச் சொல்லியே ஆகணும். உங்களுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அலெஹாந்த்ரோ கொன்சாலஸ் (அமெரோஸ் பெரோஸ்) போன வருஷம் எடுத்த படம் Birdman.  உலகின் முதல் ஆட்டோஃபிக்ஸன் படம் மட்டுமல்லாமல் க்ளாசிக். போன வருஷம் ஆஸ்கர் வாங்குச்சு. பத்து முறை பார்த்துட்டேன், இன்னும் அதோட கலைநுணுக்கத்தை முழுசாக உள்வாங்கி அனுபவிக்கல. படம் பார்க்கும் போது எக்ஸைலைத்தான் அடிக்கடி நெனைச்சேன். தயவுசெய்து … Read more