ஜெய்ப்பூர் இலக்கிய விழா

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் … Read more

அருஞ்சொல்லில் என் பேட்டி

இன்று ஹிந்து இலக்கிய விழாவில் பேசுகிறேன். மாலை ஐந்து மணி. ஹாரிங்டன் சாலையில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளி. ஹிந்து பவிலியன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் குறித்து சமஸ் எடுத்த பேட்டி அருஞ்சொல்லில் வெளியாகியுள்ளது. ஔரங்கஸேப்பும் எனக்கு ஒரு குருதான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)

ஹிந்து இலக்கிய விழா

26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் மாலை ஐந்து மணிக்கு நந்தினி கிருஷ்ணனுடன் உரையாடுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் இரண்டு நிகழ்வுகள் இருக்கும். என் உரையாடல் ஹிந்து பெவிலியனில் நடக்கும். குழம்பி விட வேண்டாம். வருவதாக இருந்தால் பதிவு செய்யுங்கள். அரங்கம் ஐநூறு பேருக்கானது என்று கேள்விப்பட்டேன். வாருங்கள். பதிவு செய்வதற்கான படிவம் கீழே: https://www.thehindu.com/litfest/lfl-registration/

அந்நியனுடன் ஓர் உரையாடல்

அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். http://tinyurl.com/Anniyunadun-Oru-Uraiyaadal

குற்றமும் தண்டனையும் (ஒரு நீதிக்கதை)

தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது.  அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம்.  அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார்.  ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை … Read more