கடிதம்

 

 

அன்புள்ள கென்,

இதுதான் தொழில்முறை (சிறந்த) எழுத்தாளர்களின் தனிச்சிறப்பு. அவர்களால் ஒரு நூலினைக் கொண்டு ஒரு பின்னலாடை உருவாக்கமுடிகிறது. சிறந்த படிப்பறிவு மற்றும் பயண அறிவு அவர்களை சுலபமாக எழுதவைத்து விடுகிறது. அதுதான் அவர்களை அவர்களின் தற்போதைய இடத்தில் வைத்திருக்கிறது.

"ஒரு படைப்பாளி என்பவன் கடவுளைப் போல; கடவுளுக்கு மதமோ தேசமோ அல்லது வேறு ஏதாவது அடையாளமோ உண்டா என்ன? படைப்பாளியும் அப்படிப் பட்டவன்தான்“ இக்கருத்தில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு

நிற்க, உங்களால் மீண்டும் ஒரு கட்டுரை சாருவிடமிருந்து. எத்தனை தகவல்களுடன்!!!!! கிழக்கு ஆபிரிக்கர்கள் புலம்பெயர்விலிருந்து அத்வானியின் ஆதிவரை அனைத்தையும் கோர்த்து நெய்து இருக்கிறார்.

"கென்னின் கதைகளைப் படித்த போது நான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பற்றிய ஒருவித நாஸ்டால்ஜிக் உணர்வு எனக்கு ஏற்பட்டது"

எனக்குமே! நான் இதை உங்களிடம் சொல்லிஇருக்கிறேன்.

"மதுரை வாழ் மக்களுக்கு நேர் எதிரான குணநலன்கள் வாய்க்கப் பெற்றவர்கள் எங்கள் பகுதி மக்கள். பயங்கரமான சொகுசுப் பேர்வழிகள். காரணம், பஞ்சாபைப் போல் அது ஒரு பொன் விளையும் பூமி தோட்டத்தில் தன் பாட்டுக்கு வளரும் சுரைக்காய்க் கொடி. தினமும் 20 சுரைக்காய் பறிக்கலாம். நானே பறித்திருக்கிறேன். இப்படியே எல்லா காய்கறிகளும். சொல்ல மறந்து விட்டேனே, எங்கள் நிலப் பகுதி கீழத் தஞ்சை மாவட்டம் என்று அழைக்கப்படும்."

இதனால்தான் நம்மூரில் அத்துணை கலைசிறப்புமிக்க ஆலயங்கள்.   பொன் விளைந்தது, நேரத்தை கலைகளிலும் செலுத்தினார்கள் முன்னொரு காலத்தில்.

"பண்ணையாரும் சரி, பண்ணைக் கூலியும் சரி, ஒரே விதமாகத்தான் இருப்பார்கள். பண்ணையாரின் மனைவியை பண்ணைக் கூலி வைத்திருப்பான். பண்ணைக் கூலியின் மனைவியை பண்ணையார் வைத்திருப்பார். எப்போது பார்த்தாலும் குடி கூத்து கும்மாளம்தான்.

ஒவ்வொருத்தனும் அரை டஜன் பெண்களோடு வாழ்ந்து கொண்டிருப்பான். செக்ஸும், சாப்பாடும், இசையும்தான் வாழ்க்கை. இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்வதனாலோ என்னவோ அரிவாள் கத்தி என்றாலே காத தூரம் ஓடி விடுவார்கள். வன்முறையே இல்லாத ஒரு நிலப்பகுதி அது"

இது அவருடைய கருத்து. மற்ற பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் உண்டு.

எம். மதன், ரூர்கேலா.

* * *