கடிதம்

 

 

‘இந்தியா விற்பனைக்கு’ கட்டுரையைப் படித்தவுடனேயே அந்தத் தமாஷ் நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். பாராளுமன்றத்தில் நடந்த கூத்தைத்தான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதுதான் சரி.

காங்கிரஸ் கட்சியினர் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிர்க்கட்சியினருக்குக் கொடுத்த லஞ்சப் பணத்தை அப்படியே அவர்கள் பாராளுமன்றத்துக்கு எடுத்துக் கொண்டு வந்து மூட்டை மூட்டையாகத் திறந்து காட்டியது இந்திய தேசத்துக்கே ஒரு அவமானம். காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் கொடுத்ததை அவர்கள் படம் பிடித்து வேறு வைத்திருக்கிறார்கள். எனவே ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று காங்கிரஸ்காரர்கள் பதுங்கவும் முடியாது. இந்தக் காட்சியை தேசம் முழுவதும், ஏன், உலகம் பூராவும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கூட அவர்கள் மறந்து விட்டார்கள். அணுசக்தி ஒப்பந்தம் பற்றியா அவர்கள் பேசினார்கள்?

இது போன்ற செயல்களால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை போய் விட்டது. இனிமேல் அவர்களை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல முடியும்?

ஆர். பிரகதீஷ்