அன்புள்ள சாரு ,
நீண்ட நாள் வாசகன். மேதாவித்தனமான எழுத்துக்கும் முகஸ்துதிகளுக்கும் மத்தியில் ஒரு நிர்வாண நடையுடன், எதையும் இலை மறைவு காய் மறைவாக சொல்ல சிரமப்படாமல் பிரமிக்கத்தக்க எளிமையுடன் போகிற போக்கில் எழுதும் தங்கள் திறன் வியக்க வைக்கிறது. எதையும் எதிர்பார்த்து எழுதும் போக்கு எள்ளளவும் இல்லை. முதல் வாசிப்பிலேயே பல நாள் வாசித்த உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நியூயார்க் டைம்ஸை சுலபமாக வாசித்து விட முடிகிறது. ஆனால் நம்மூர் இலக்கியவாதிகளை வாசிக்கப் படாத பாடு பட வேண்டி இருக்கிறது. சிடுக்கான வார்த்தைகள் நம்மை மிகவும் அன்னியப்படுத்திவிடுகின்றன. உங்கள் ஸ்டைல் நியூயார்க் டைம்ஸ் வகை.
கமல் பற்றி இவ்வளவு வெளிப்படையாக, அதேசமயம் உண்மையாக விமர்சனம் செய்யும் போக்கு அருமை. ஒரு திறமையான கலைஞனிடமிருந்து தரமான படைப்பை எதிர்பார்ப்பதன் விளைவே அது. வசனம் எழுதும் வாய்ப்பை எதிர்பார்த்து வெளிவந்த விமர்சனங்கள் சில நகைப்புக்குரியதாக இருந்தன. ஒரு விவாதத்திற்குரிய பொருளை வைத்து அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத படம் எடுப்பதில் வல்லவர் கமல்.
விருமாண்டி - மரண தண்டனை
ஆளவந்தான் - split personality
தசாவதாரம் - கேயாஸ் தியரி
தங்களது ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை வாங்க முயன்று கொண்டிருக்கிறேன். Amazon did not help much. Thanks for advising blaft.com
இரண்டு லட்சம் ஹிட்ஸ் இலக்கை அடைந்ததற்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். இதன் மூலம் நாங்கள் நிறைய அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
ஜெகன்
பாஸ்டன்.
P.S: http://www.google.com/transliterate/indic/Tamil is very good. It helped me a lot writing this letter in Tamil. Google is doing an amazing job.
* * * * *
நியூஸிலாந்தில் கார்த்திக்
சாரு
இன்று இரண்டாவது புத்தகமும் கைக்கு வந்துவிட்டது. சக அலுவலர் ஒருவர் வேலை நிமித்தமாக இங்கிருந்து எங்களது சென்னை அலுவலகத்திற்கு வெள்ளியன்று புறப்படுகிறார். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்.
அன்புடன்
சுந்தர்
பி.கு.:- உறைக்குள் புத்தகங்களை வைப்பதற்கு முன்னால் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று Alphabetical Africa புத்தகத்தை விர்ரென்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்து மிரண்டுவிட்டேன்! எனக்கு விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகளே ஜாஸ்தி! Alphabetical Africa- வை அடுத்த ஜென்மத்தில் படித்துக் கொள்கிறேன். :-)
* * * * *