மாமா வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதெல்லாம் என்னுடைய ஒரு வேளைச் சோற்றுக்காக. எழுத்துக்காக அல்ல. எழுத்தைப் பொறுத்தவரை நான் நெருப்பு. எனக்கும் பணம் தேவைதான். ஒரு லட்ச ரூபாய் என்பது எனக்கு ஒரு கோடி ரூபாயைப் போல. ஆனால் நீங்கள் எனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு, உங்கள் நாவலைப் பாராட்டச் சொன்னால், அந்த நாவல் நன்றாக இருந்தால்தான் ஆயிற்று; இல்லையென்றால் சவுக்கடிதான். வாரமலரில் வந்த 'கையருகே ஆகாயம்' என்ற கதையைப் படித்திர்கள்தானே? அதிலிருந்து புரிந்திருக்குமே, நான் எப்படிப் பட்ட ஆள் என்று? ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து என்னை பாரிஸ் அழைத்துக் கொண்டு போன
ராமசாமிக்கு நான் கொடுத்திருக்கும் பரிசைப் பாருங்கள்...
அவ்வளவு ஏன்? வா.மு. கோமுவை நான் என் வாரிசு என்று சொன்னேன் அல்லவா? அது அவருடைய சிறுகதைகளுக்காக. ஆனால் அவருடைய 'கள்ளி' என்ற நாவலின் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்திருந்த போது, அந்த விழா மேடையிலேயே "அந்த நாவல் அறுபதுகளிலேயே எழுதப் பட்டுத் தீர்ந்து போய் விட்ட விஷயம். அதையே இப்போதும் திரும்ப எழுதுவது வீண்" என்று சொல்லி அந்த நாவலை முற்றாக நிராகரித்தேன். நான் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. இலக்கியம்தான் எனக்கு உயிர்; அதுதான் என் சுவாசம். அம்மாதிரி ஒரு விஷயத்தில் எப்படி நான் பொய் சொல்ல முடியும்?
ஆனால் இந்த ஃப்ராட் எளுத்தாளன் இருக்கிறானே, அவன் சினிமாக்காரர்கள் கொடுக்கும் ஒரு அற்ப இலக்கியப் பரிசுக்காகக் கூட யார் குண்டியையும், எந்த லஜ்ஜையும் இல்லாமல் நக்குவதற்குத் தயாராக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். இது பற்றி ஒரு பத்திரிகையில் கிசு கிசு வந்தால் அந்தப் பத்திரிகைக்கே ஜால்ரா அடிக்கிறான். காரணம்? அந்தப் பத்திரிகை நிருபரை இவன் 'சும்பன்' என்று எழுதி அசிங்கப்படுத்தி விட்டதால் இப்போது எல்லோரையுமே நக்க வேண்டியதாகி விட்டது. தன் வினை தன்னைச் சுடும். இந்த ஃப்ராடு எளுத்தாளன் இலக்கியத்தில் செய்து கொண்டிருக்கும் இந்த நக்கிப் பிழைப்பை என்னுடைய அரசு உத்தியோகத்தில் சுமார் 20 ஆண்டுகள் செய்திருக்கிறேன். "ஏய் இடியட்" என்று என் அதிகாரி என்னைத் திட்டும் போது கூட ஒரு வேசியைப் போல் அந்த அதிகாரியைப் பார்த்துப் பல் இளித்திருக்கிறேன். அந்த அனுபவம் எல்லாவற்றையும்தான் என்னுடைய ராஸ லீலாவில் 700 பக்கங்களில் எழுதியிருக்கிறேன். ஆனால், இந்த ஃப்ராடு எளுத்தாளனைப் போல் என் எழுத்துக்காக எவன் குண்டியையும் என்றைக்குமே நான் நக்கியதில்லை. அந்த வேசித்தனம் என்னிடம் ஒரு போதுமே இருந்தது கிடையாது.

நான் இவ்விஷயத்தில் ஒரு ஜென் குருவைப் போன்றவன். என்னுடைய ரோத்தான் அடியில் குண்டி பழுத்து விடும். (நிர்வாணமாகக் குப்புறப் படுக்க வைத்து பிரம்பினால் குண்டியில் அடிப்பதற்குப் பெயர் ரோத்தான்). இதற்காக என்னை ஒரு வன்முறையாளன் என்று நினைத்து விடாதீர்கள். லட்சங்களையும், கோடிகளையும் கொடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது என்பதற்காகச் சொன்னேன்.
என் எழுத்து நெருப்பு. இந்த ஃப்ராடு எளுத்தாளனைப் போன்ற literary pimp எவனும் என் எழுத்தின் பக்கத்திலே வந்தால் பொசுங்கி விடுவான்கள். காரணம், என்னுடைய ஒவ்வொரு எழுத்திலும் நான் கிடந்த பட்டினி, நான் அடைந்த அவமானம், நான் பட்ட துன்பம் எல்லாமே தீக்கங்குகளாய் கனன்று கொண்டிருக்கின்றன.
ஒரு பெண் என்னை "3000 ரூ. எடுத்து வை உடனே" என்று கேட்டாள்.
"எதற்கு?"
"நீ திடீரென்று செத்துப் போனால் உனக்குப் பாடை கட்டுவதற்கும், உன்னைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போவதற்கும் தேவைப்படும். உன் சாவு செலவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது..."
சண்டையில் சொல்லவில்லை ஐயா! நிஜமாகவே, சீரியஸாகவே, அமைதியான குரலிலேயே சொன்னாள். இவ்வளவு பெரிய அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் ஏன் இருந்தேன்? வெளியேறி இருந்தால் இன்று என் மகள் உயிரோடு இருந்திருக்க மாட்டாள்; அல்லது, மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு மனநோயாளியாக இருந்திருப்பாள். அப்போது அந்த சிசுவுக்காக இவ்வளவு அவமானத்தையும் பொறுத்துக் கொண்டேன்.
வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பேன். "டேய் தேவடியாள் மகனே, எப்போதடா வீட்டை விட்டு வெளியே போவாய்?" என்று கேட்டு காலை என் தலையின் மீது தூக்கிக் கொண்டு என்னை மிதிக்க வரும் ஒரு பெண் உருவம். பதிலே சொல்லாமல் கூனிக் கொள்வேன். பதிலுக்கு வன்முறை செலுத்த எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? என் மகளுக்காகப் பொறுத்துக் கொண்டேன்.
இப்படி ஓராயிரம் கதைகள் உண்டு. இதுதான் ஸீரோ டிகிரி. இது எல்லாவற்றையும்தான் ஸீரோ டிகிரியில் பதிவு செய்திருக்கிறேன்.
ஆனால் இலக்கியப் பரிசுகளுக்காக மற்றவர்களின் குண்டியை நக்கிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய pimp, கடந்த 20 ஆண்டுகளாக என்னை 'தினமலரில் கிசுகிசு எழுதுபவன்'
என்றே எழுதிக் கொண்டிருக்கிறான். டேய், செவிட்டு மூடனே...கேத்தி ஆக்கர் தன்னுடைய பிழைப்புக்காக sex live showக்களில் நடித்துக் கொண்டிருந்தாள் என்று உனக்கு எத்தனை ஆயிரம் முறை சொல்வது? பிழைப்புக்காக ந்யூயார்க்கில் பகலைப் போல் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் ராட்சச விளக்குகளின் கண் கூசும் வெளிச்சத்தில், காட்டெருமையைப் போன்ற ஒரு கருத்த மனிதனுக்கு, பார்வையாளர்களாக வந்திருக்கும் நூறு பேர் முன்னிலையில் தன்னைப் புணரக் கொடுப்பதுதான் கேத்தி ஆக்கர் செய்த வேலை. அதற்காகத்தான் ஸீரோ டிகிரியை கேத்திக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். சோற்றுக்காக மாமா வேலை செய்த நானும் அவளும் தோழர்கள் என்ற முறையிலும் சரி; I Dreamt I was a Nymphomaniac என்று தன்னுடைய 27-ஆவது வயதிலேயே எழுதி, அதை ஒவ்வொரு கல்லூரியிலும் சென்று மாணவர்களிடையே வாசித்துக் காண்பித்தவள் என்ற முறையிலும் சரி; அந்த சமர்ப்பணம் பொருத்தமானதுதான். தான் லைவ் ஷோவில் வேலை செய்த அனுபவத்தை வைத்துப் பின்னாளில் அவள் Pussy என்று ஒரு நாவலை எழுதினாள். அதற்காகவும்தான் அந்த சமர்ப்பணம்.
இப்போது என்னை கிசுகிசு எழுத்தாளன் என்று சொல்லி மகிழும் அந்த இலக்கிய pimp -இடம் கேட்கிறேன்; கேத்தி ஆக்கரை விட நான் செய்த கிசுகிசு வேலை ஒன்றும் மோசமில்லை தானே?
சில நண்பர்கள் இந்த அயோக்கியனுக்கெல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறார்கள். என் கருத்தும் அதுதான். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக 'தினமலர் கிசுகிசு எழுத்தாளன்' என்ற மழுங்கிய ஆயுதத்தையே வைத்து என்னைக் கொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த இலக்கிய pimp-ஐ நான் என்னதான் செய்வது, சொல்லுங்கள்?
***
8.5.2008.
2.10 p.m.