அய்யம்பாளையமும் , பாலஸ்தீனமும்

 

இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு பதிப்பகங்கள் பெருகி விட்டன. புத்தகங்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்லாததனால் தான் மிகக் குறைவான அளவில் விற்கின்றன ' என நம்பிக்கையில் சில பதிப்பகங்கள் கிராமம் கிராமமாக புத்தகங்களை இறக்கிக் கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு டீக்கடையில் ' பாலஸ்தீனப் பிரச்சினையின் தீர்வு என்ன ?' என்ற ரூ. 199 விலையுள்ள ஒரு புத்தகம் விற்பனையில் இருப்பதைக் கண்டேன். பின்னால் கானல் பதிப்பகம் என்று கண்டிருந்தது

டீக்கடைக்காரரிடம் கேட்ட போது , '' கொண்டு வந்து வைப்பார்கள் , பிறகு கொஞ்சநாள் கழித்து வந்து எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள் '' என்றார்.

இம்மாதிரி கிராமங்களில் வாழும் மக்கள் அதிகபட்சம் ஒரு டீயும் , ஒரு பஜ்ஜியும் 5 ரூபாய்க்கு வாங்குவார்கள். அவ்வளவுதான். தமிழ் மக்கள் மீது இத்தகைய பதிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது !

என்னிடம் கூட சில பதிப்பாளர்கள் புத்தகம் கேட்டார்கள். என் புத்தகங்கள் அனைத்தும் உயிர்மை பதிப்பகம் மூலமாக மட்டுமே வெளிவரும் என்று மனுஷ்ய புத்திரனிடம் வாக்கு கொடுத்திருப்பதைச் சொல்லி விலகிக் கொண்டேன்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு பெரிய சம்பவம் நடந்தால் அவந்திகாவின் உடல் நலம் குன்றிப்போய் விடுகிறது என்பதை பல வருடங்களாக அவதானித்து வருகிறேன். என் அம்மா இறந்தபோது அவளுக்கு வந்த டைபாய்டு மீண்டும் மீண்டும் தாக்கி 6 மாதம் படுத்த படுக்கையாகக் கிடந்தாள் , பின்னர் , சில ஆண்டுகள் கழிந்து , அவளுடைய அம்மா இறந்தபோது மீண்டும் டை · பாய்டு தாக்கி குணமாகி , தாக்கி குணமாகி இப்படியே 6 மாதம் அவளைப் படுக்கையில் கிடத்தி விட்டது. சரியாகி விட்டது என்று நினைத்து தாய்லாந்து கிளம்பிப் போய் சுற்றிக் கொண்டிருந்த போது , அவந்திகாவுக்கு ரொம்பவும் முடியாமல் போய்விட்டதாகத் தகவல் வந்து தாய்லாந்தின் ஈசான் மாகாணத்திலிருந்து லாவோஸ் கிளம்ப இருந்த நான்  - ஒரு ஆற்றுப்பா லத்தைக் கடந்தால் லாவோஸ்   - அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வர நேர்ந்தது. கடைசியாக , சென்ற ஆண்டு சின்மயா நகரிலிருந்து மந்தைவெளிக்கு வீடு மாற்றிய போது எலி ஜுரம் வந்து - மருத்துவ பாஷையில்   Leptospirosis என்கிறார்கள் -   ஒன்பது மாதம் படுத்த படுக்கை , பிழைப்பே மறு பிழைப்பு என்று ஆகி விட்டது. வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளுக்குள் நொறுங்கிப் போய் விட்டேன். அவள் குணமாக வேண்டுமென்று ஒவ்வொரு வியாழனும் மயிலாப்பூர் பாபா கோவிலுக்குச் சென்று மாலை 6 மணியிலிருந்து 7.30 வரை தண்டம் பிடித்து நின்றேன்.

2 லட்ச ரூபாய் செலவாயிற்று. ஒரு ஊசி விலை 2000 ரூ. காலையிலும் , மாலையிலும் போட வேண்டும்.

ஏழைகளுக்கெல்லாம் இந்த   எலி ஜுரம் வந்தால் எ ன்ன் செய்வார்கள் என்று திகிலாக இருந்தது. பின்னர் மயிலாப்பூர் சாயிரமணன் என்ற மருத்துவரால் தேறி எழுந்தாள். இடையில் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதை கூட ஞாபகம் வந்து போயிற்று. அந்தக் கதையில் இப்படித்தான் என்னைப் போல் கஷ்டப்படுவார் ஒரு கணக்கப் பிள்ளை.

அவந்திகாவுக்கு இப்படி குடும்பத்தில் யாராவது இறந்து போனால் உடம்புக்கு வந்து விடுகிறது என்ற காரணத்தினாலேயே யாருக்கும் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அடிக்கடி பிரார்த் த னை செய்து கொள்வேன். இருந்தும் நான்கு தினங்களுக்கு முன் ஒருநாள் இரவு அவளுடைய தகப்பனார் வைகுண்ட பதவி அடைந்து விட்டதாகச் செய்தி வந்தபோது எனக்கு அடி வயிற்றில் திகில் பரவியது.

காலையில் ஐந்து மணிக்கே எழுந்து கிளம்பினா ள் அவந்திகா. இத்தனை காலையில் கிளம்பினா ல் உன் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. என்னால் உன்னுடன் இப்போதே கிளம்ப முடியாது , யோகாப்பியாசத்தையும் தியானத்தையும் முடிக்காமல் என்னுடைய நாள் தொடங்காது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டேன்.

உடல்நலம் குன்றிப் படுத்து யாரையும் நான் படுத்தியதில்லை. இருதய அறுவை சிகிச்சை மட்டுமே விதி விலக்கு. ஆனால் அதன் காரணமாகவே எனக்கு இது பற்றிய கவனம் மேலும் கூடிவிட்டது. கிளம்பிச் சென்றவளின் பின்னாலேயே ஓடினேன் , மப்ளரை எடுத்துக் கொண்டு. ஆனால் அதற்குள் ஆட்டோவில் ஏறிவிட்டாள். மறுநாளே ஜுரம். கையில் நயாபைசா இல்லை.
 
 
 
 
 
 
  next