ஹிந்தி

ஹிந்தியை ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டு விடலாம். அந்த மொழி இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது என்பதைத் தவிர அந்த மொழிக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. ராஜாஜியிடம் நேரு கேட்டார், ஏன் நீங்கள் ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள், இந்தியை எதிர்க்கிறீர்கள் என்று. ராஜாஜியின் பதில், ஆங்கிலேயர் எம்மை வென்றார்கள், நீங்கள் வெல்லவில்லை. இந்தி மொழித் திணிப்பு என்பது வட இந்தியரின் இனவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பெரும்பான்மையான வட இந்தியர் இனவெறியர் என்பது என் அனுபவம். இந்தித் திணிப்பை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். இந்தித் திணிப்பினால் பல பிராந்திய மொழிகள் அழிந்து விட்டன.