Conversations with Aurangzeb: அராத்து

அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது:

சாரு நிவேதிதாவின் உண்மையான உயரத்துக்கு நிகரான , நிகராகக் கூட வேண்டாம். பத்து சதவிகித அங்கீகாரம் மற்றும் மரியாதை கூடக் கிடைத்ததில்லை. உலக இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழிலக்கிய உலகத்தில் இப்படித்தான் நடக்கும். தமிழிலக்கிய உலகம்தான் இப்படி என்றால் , பொதுச் சமூகம் ஒரு ஃபில்ஸ்டைன் சமூகம். கொஞ்ச வருடங்கள் முன்னால் வரை பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் டீக்கடையில் ஓசியில் இருந்ததாலும் , ஸ்மார்ட் போன் அப்போது இல்லாதிருந்ததாலும்….இப்போது அது கூடக் கிடையாது.

வார இதழ்களும் அதள பாதாளத்தில்…துப்பறியும் நாவல் படிக்கக் கூட நாதியில்லை இப்போது. லைட்டாக போர்ன் கதைகள் மட்டும் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இந்தச் சூழலில் நவீன இலக்கியம் , உலகத் தரமான இலக்கியம் , போஸ்ட் மார்டனிஸம் எல்லாம் எங்கே தெரியப்போகிறது ?அதனால் சாரு எப்போதும் அவுட்சைடர்தான் இந்தியாவில், தமிழ் நாட்டில்.

இந்த நிலைமையில் சாருவின் நான்தான் ஔரங்ஸேப் ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவருகிறது.

இது வந்து உலக அளவில் பிரபலமானதும் சாருவின் உண்மையான உயரம் இங்கிருக்கும் மரமண்டைகளுக்குத் தெரிய வரலாம். சாருவின் வாழ்வு இந்த நாவலுக்கு முன், இந்த நாவலுக்குப் பின் என பிரிக்கப்படும் என உறுதியாக நினைக்கிறேன். சாரு அவருடைய தகுதிக்குச் செல்லக்கூடிய உயரங்களை இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சாத்தியப்படுத்தும். மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

புத்தகத்தை வாங்க லிங்க் கீழே. சாரு படைப்பின் மீது மரியாதை உள்ளவர்கள் இதை வாங்கி நூலகம் , தெரிந்தவர்கள் , இலக்கியவாதிகள் என பரிசளிக்கலாம். இதை இந்தியாவுக்கு வெளியே எப்படி எல்லாம் கொண்டு சேர்க்க முடியுமோ , அதை எல்லாம் செய்ய வேண்டும். ஹேட்டர்கள் வழக்கம் போல கதறட்டும். சாரு எழுத்தின் மீது மரியாதை உள்ளவர்கள் இதை வாங்கி கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.

இணைப்பு:

https://amzn.eu/d/fT34SI5