சில நூல்கள் தேவை

அமெரிக்காவில் வசிக்கும் சில நண்பர்கள் எனக்கு நூல்கள் தேவைப்படும் போதெல்லாம் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களின் மின்னஞ்சல் முகவரி இருந்த குறிப்பேடு தொலைந்து விட்டது. வாட்ஸப்பில் இருந்த ஓரிருவர் மட்டுமே கைவசம் உள்ள தொடர்பு. ஒருவரிடமே எல்லா சுமையையும் ஏற்றக் கூடாது என்பதால் புத்தகம் வாங்கி அனுப்பக் கூடிய நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புத்தகங்களை இந்திய முகவரிக்கு அனுப்பத் தேவையிருக்காது. அங்கேயே உள்ள நண்பர்களுக்கு அனுப்பி விட்டால் அவர்கள் இந்தியா … Read more

ஆனது ஆகட்டும்…

நமக்கு முகம் தெரியாமல் நம் நண்பர்களாக முகநூலில் புழங்குபவர்கள் பலர் நம்மிடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நான் முகநூலில் இருப்பதற்குக் காரணம், சமூகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே ஒரு தொடர்பு சாதனம் அதுதான். மற்றபடி நான் செய்தித்தாள் கூடப் படிப்பதில்லை. தொலைக்காட்சி என் வீட்டிலேயே இல்லை. நேற்று பூனைகளின் நிலை பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்: வீட்டில் மூட்டை மூட்டையாக பூனை உணவு இருக்கிறது. நாலைந்து பூனைகள் தரைத் தளத்தில் … Read more

ரஜினியும் சுவாமியும்

நான் மோடி ஆதரவாளன் அல்ல; மனித சுதந்திரம் பற்றிக் கவலைப்படும் யாருமே இன்றைய நிலையில் மோடி ஆதரவாளராக இருக்க முடியாது. அவர் மூலம் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸம் மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. எனவே நான் மோடியை எதிர்க்கிறேன். மோடியை விட ஊழல் காங்கிரஸ் தேவலை. ஏனென்றால், ஃபாஸிஸத்தை விட ஊழல் பரவாயில்லை. அதற்காக, இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாலேயே மோடியின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருக்க மாட்டேன். காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை நீக்கியது … Read more