பிரிவு

இந்த 64 வயது வரை எந்த இழப்புக்காகவும் வருத்தப்பட்டதில்லை. எந்தப் பிரிவும் என்னைப் பாதித்ததில்லை. உயிருக்கு உயிராக இருந்த உறவுகள் நட்புகள் பிரிந்தன. ஒரு துளியும் கலங்கவில்லை. இரண்டு முறை என் உயிரே பிரிந்து விடுவேன் என பயமுறுத்தியது. கவலையே படவில்லை. எதுவுமே என்னை அசைத்ததில்லை. ஆனால் இன்று காலையிலிருந்து ஒரு விஷயம் என்னைப் பிழிந்து கொண்டிருக்கிறது. துயரம் என்ற உணர்வையே அனுபவித்தறியாததால் இதுதான் துயரமா என்றும் தெரியவில்லை. இருக்கலாம். இதுதான் துயரமாக இருக்கும். இந்த ஒரு … Read more

இலக்கியத் தரகர்கள்

ஷோபா சக்தி முகநூலில்: நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாருநிவேதிதாவுக்கு 44 வயது. கண்ட நாள் முதல் நெருக்கமாகிவிட்டோம். அப்போதெல்லாம் சாரு எனக்கு நீளமாகக் கடிதங்கள் எழுதுவார். என் மகனைப் போல நீயிருக்கிறாய், என்னை இருபது வருடத்திற்கு முன்பு பார்த்ததுபோலவே இருக்கிறாய் என்று கடிதத்திலும் ‘சிறுகதையில் ஷோபாவை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்று பத்திரிகைகளிலும் எழுதுவார். “கொரில்லா“ இனவாத நாவல், தகவல் தொகுப்பு எனச் சாடினாலும் மற்றப்படிக்கு பல்வாறு என் கதைகளை புகழ்ந்திருக்கிறார்.. எனது கடைசிக் … Read more

என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தி

இதுவரையிலான என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தியாக இதைக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதை எழுதியவர் கார்ல் மார்க்ஸ். நேற்றைய இரவு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் இறந்துபோயிருக்கிரார்கள். ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களில் எட்டு வயது சிறுமியும் உண்டு என்று ‘கண்ணியமான’ பத்திரிகைகள் அழுத்தி உச்சரிக்கின்றன. ‘நான் உடைந்து போய்விட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்த இசை நிகழ்ச்சியின் பாடகர் Grande. உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நமது … Read more

ஞாவ்

ச்சிண்ட்டு படும் பாட்டை நினைத்து ரத்தக் கண்ணீர் வருகிறது. அந்தச் சின்ன உடம்பு பூராவும் சுமார் 200 காயங்கள் இருக்கும். வெட்டு வெட்டு வெட்டு. கத்தியால் கீறியது போல். கடித்துக் கிழித்தது போல். சில இடங்களில் முடியே போய் விட்டது. ச்சிண்ட்டுவுக்கு சண்டையே போடத் தெரியாது போல. பக்கத்து வீட்டுப் பூனை இதைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று சபதமே செய்திருக்கிறது போல. எவ்வளவுதான் கல்லால் அடித்துப் பார்த்தும் அதன் மீது கல் விழுவதில்லை. அந்த ரவுடிப் … Read more

பிரார்த்தனை

அவந்திகா மும்பையில் இருக்கிறாள். காயத்ரியும் அவர் கணவர் ராமசுப்ரமணியனும் மும்பையில். ஸ்ரீராமும் ஊருக்குப் போய் விட்டார். ஸ்ரீராம் எந்த ஊர் என்று இன்னமும் மனசில் தங்க மாட்டேன் என்கிறது. ஆக, கைத்துணைக்கு யாருமே வீட்டில் இல்லை. ராம்ஜியின் வீடு திருவான்மியூரில் இருக்கிறது. அவரை அலைக்கழிக்க முடியாது. ஏன் இத்தனை யோசனை என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் திடீரென்று ஆஞ்ஜைனா. ஏதாவது அவசரம் என்றால், மருத்துவமனைக்கு எப்படிப் போவது என்று யோசனையாய் இருக்கிறது. ச்சிண்ட்டுவை பக்கத்து வீட்டுப் … Read more