சாருவின் காவிய மரபிலான கதைசொல்லல் – ந. முருகேசபாண்டியன்

தமிழரின் அடையாள அரசியலும் பாலியல் மறுபேச்சுகளும்: சாருவின் புதிய எக்ஸைல் நாவலை முன்வைத்து ந. முருகேசபாண்டியன் காத்திரமான நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரான எனது நண்பர், “இன்றைய தேதியில் பாண்டியன் நீங்கதான் அதிகமாகத் தமிழ் நாவல்களை வாசிக்கிறீங்க” என்று அலைபேசியில் பேச்சுவாக்கில் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2010-ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட ‘பத்தாண்டுகளில் தமிழ் நாவல்கள்’ என்றொரு கட்டுரை, காலச்சுவடு பத்திரிகையில் பிரசுரமானவுடன், இலக்கிய நண்பர்களில் சிலர் எப்படி இவ்வளவு நாவல்களை உங்களால் வாசிக்க முடிந்தது என்று … Read more

துப்பறிவாளன்

சாரு, படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு காட்சிகள்: அந்தக் கருணைக்கொலை காட்சியை இப்போதுள்ள இயக்குனர்களில் மிஷ்கினால் மட்டுமே எடுக்க முடியும். அதேபோல், howsoever explicit, கடைசிக் காட்சியில் வில்லன் பேசும் வசனத்தையும் இப்போதுள்ள இயக்குனர்களில் மிஷ்கினால் மட்டுமே எடுக்க முடியும். (“எத்தனையோ மனிதர்களைக் கொன்றிருக்கிறேன்; மாட்டிக்கொண்டதில்லை. ஒரு நாயைக் கொன்றேன். மாட்டிக்கொண்டேன். இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால், உன் நாயைக் கொன்றதற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.”) ஸ்ரீராம்