கைகளில் அடங்கிய பேரண்டம்

’உச்சக்கட்ட இன்பம் எது?’

’பத்து பூனைகள், பத்து பெயர்கள்.
லக்கி, டெட்டி, ஸிஸ்ஸி, கெய்ரோ,
குட்டி கெய்ரோ, டைகர், ப்ரௌனி,
வெல்வெட், ச்சிண்ட்டூ, ச்சோட்டூ.
ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு உலகம்

ச்சோட்டூ மடியில் ஏறுகிறது
குட்டியான உரோமக் குவியலாக,
மென்மையாக முணுமுணுத்தபடி
என் மடியில் அமைதியாக உறங்குகிறது.’

’உச்சக்கட்ட துயரம் எது?’

‘ஸிஸ்ஸி டைகரைத் துரத்துகிறது,
குரல்வளையைக் குதற முயல்கிறது.
டைகர் டெட்டியை விரட்டுகிறது,
டெட்டி ச்சோட்டுவை மிரட்டுகிறது.’