என்னிடம் உனக்கு
எதுயெது முதல்முதல்
எனக் கேட்கிறாய்
குறைவாய் அணியும்
உனது ஆடைகளை
சமரசமாய் ஏற்றது
முதல்
ஸ்பர்ஸம் கொண்டாலே
உனக்கு
கலவிக்கான மனநிலை
வந்து விடுகிறதென்பதால்
இன்று உன்னைத்
தொடாமலிருந்தது
முதல்
என்னை நீ
அடித்து விளையாடுவது
முதல்
அக்கார அடிசில்
கேட்டேன்
கருவாட்டுக் குழம்பு
கேட்டேன்
விரால்மீன் தலைக்குழம்பு
கேட்டேன்
மிக நீண்ட காலமாகக்
கிடைக்காமலிருந்த
ஃபுல்க்காவும் கருப்புக்
கொண்டைக்கடலைக் கறியும்
கேட்டேன்
நானெழுதும் நாவலை
என்னோடு சேர்ந்தெழுது
என்றேன்
கேட்டதெல்லாம்
கிடைக்கத் தந்தாய்
எல்லாம் முதல்
எல்லாம் முதல்
எல்லாம் முதல்
எனக்காக நீ
மூன்று மணி நேரம்
ஒரு ரெஸ்டாரண்டில்
காத்திருந்தாய்
என்ன செய்தாய் எனக்
கேட்டபோது
யாரோ ஒருத்தனோடு
பேசிக்கொண்டிருந்ததாகச்
சொன்னாய்
நான் மனமுடைந்தேன்
உன்னோடு பேச மறுத்தேன்
அப்படியானால் கிளம்புகிறேன்
என்றாய்
இப்படியான
விளையாட்டுகள்
முதல்
என்னை என் காதலி
டா சேர்த்து
அழைப்பது
முதல்
புவியெங்கும்
பரவிக்கிடக்கும்
முத்தம்
எனக்கு மட்டும்
லபிக்காமல் இருந்தது
இப்போது
திகட்டத் திகட்டக்
கிடைக்கும் முத்தம்
முதல்
உன்னை சுவைத்து
முடித்த நான்
“உன் திரவம் கெட்டிப்பட்டும்
கரிப்பு சுவையும்
கொண்டிருக்கிறது”
என்றேன்
ரெண்டு மூணு
தினங்களாக
தேகம் சூடு கொண்டதால்
இருக்கலாம்
என்ற நீ
நேற்று உன் விரல் கொண்டு
சுவைத்துப் பார்த்து
இன்று அப்படியில்லை
என்றது
முதல்
மேஜை நாற்காலிகளில்லாத
இந்த வீட்டின் தரையில்
அமர்ந்திருக்கிறேன்
நீ என்னெதிரே
கவிழ்ந்து படுத்திருக்கிறாய்
இப்படிக் காண்பது
முதல்
எனக்குப் பிரியமான
உனது பின்னங்கழுத்தில்
முத்தமிடுகிறேன்
கலவிக்குத் தயாரா
என்கிறாய்
வேலை மிகுதியில்
தாது லேகியம்
தின்னவில்லை
விரைப்பின்றிக் கிடக்கும்
சாதனம் கொண்டு
கலவி காண்பது
எங்ஙனம்
You are a great
Fucker
என்றே கேட்டுப்
பழகிய நான்
இப்போது
தாது லேகியம்
தேடுவது
முதல்
சுவைக்கவா என்கிறாய்
இப்போது இருப்பதே போதும்
மேலேறிப் புணரவா
என்கிறாய்
இது எல்லாமே
முதல்
இரண்டு மணி நேரம்
நீளும்
முன்விளையாட்டும்
அந்த முன்விளையாட்டிலேயே
நீ உச்சம் காண்பதும்
முதல்
அடியேய்
முக்கியமான ஒன்றை
விட்டு விட்டேன் பார்
ஒருவனுக்கு ஒருத்தியென
வாழ்கிறேனே
அதுவும்
முதல்
முதல்
முதல்