மூன்று கவிதைகள்

1.இளம் கவிஞர்களுக்கான ஆலோசனை

இளம்கவிஞர்களுக்கான

ஆலோசனையில்

எதிர்கவிதை எழுதிய

நிகானோர் பார்ரா சொன்னது

என்ன?

கவிதையில் எல்லாமே

அனுமதிக்கப்பட்டதுதான்

ஒரே நிபந்தனை,

பக்கங்கள் நிரப்பப்பட

வேண்டும்.

பார்ராவின் ஆலோசனைக்கு

ஓர் பின்குறிப்பு:

பக்கங்கள் நிரப்பப்பட

வேண்டும்,

குருதியினாலும்

ஆன்மாவினாலும்;

குசுவினால் அல்ல.

2. பால்பிடேஷன்

1
பாவமன்னிப்பு வழங்குகின்ற
பணியில்
யாருமே சேர்வதில்லை.
எத்தனையோ சலுகைகளை
அள்ளித் தருவதாக
அறிவித்தும்
பொருட்படுத்த யாருமில்லை
ஒரு கட்டத்தில்
அந்தப் பணியையும்
தானே செய்யத் தொடங்கினார் கடவுள்.
துவக்க விழாச் சலுகைகள்
எக்கச்சக்கம் என
விளம்பரங்கள் கண்ணைப் பறித்தன
ஊரே திரண்டு
கடவுள் முன் நின்றது
{நீண்டு கிடந்த வரிசையில்
கவிஞர்களையும் சிறார்களையும் தவிர
மற்றெல்லோரும் நின்றிருந்தார்கள்}

2
மதியப்பொழுது வரை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
நானும் போய் வரிசையில் நின்றேன்
சர்வ வல்லமை பொருந்திய
கார்ப்பொரேட் கம்பெனி
ஸ்பான்ஸர் செய்தருளிய
புண்ணியத்தால்
கொளுத்தும் வெய்யிலுக்கிதமாக
வரிசையில் நின்றவர்க்கெல்லாம்
கிடைத்தது நீர்மோர்

3
என் டோக்கன் எண்ணைக்
கூவியழைத்த கடவுள்
எனது அடையாள அட்டையைச் சரிபார்த்தவாறே
“உன்னுடைய பேர் பதிவேட்டில்
இல்லையே?”
என்றார்.

“நான் செய்த பாவத்தைக்
தன் கண்ணீருக்குள் அமிழ்த்தியிருப்பாள்
என் காதலி.
வாதை செய்தறியாத
நான்
அவளைப் புறக்கணித்தேன்
முற்றிலுமாகப் புறக்கணித்தேன்.
தற்போதெல்லாம்
துர்க்கனாக்களால் நித்திரை கெடுகிறது
பாவம் பழகவில்லை
யாதலால்
பதற்றம் மேலிடுகிறது
இறைவரே, என் செய்ய?”
எனக்கேட்டேன்

4
இந்த இடத்தில்
இன்றைக்கு விழிப்பு வந்தது.
காதருகே
“பாவம் செய்க” என்று
யாரோ
கிசுகிசுப்பது போல் தோன்றியது.

3. பற்றியெரியும் பள்ளத்தாக்கு

ஏன்டா பைத்தியக்காரக் கூதி

(உன்னை வேறு எப்படித் திட்டுவது

என்று தெரியவில்லை)

நான் பாட்டுக்கு நானுண்டு என் படிப்பு

உண்டென்று சவமாய்க் கிடந்தேன்

எங்கிருந்தோ வந்த நீ

உன் எழுத்தால் என்னை மயக்கி

என் தேகம் மனம் ரெண்டையும்

உயிர்ப்பித்துத் தொலைத்து விட்டு

எங்கோ ஓடி விட்டாய்

இப்போது என் தேகம் பற்றி

யெரிகிறது

என்ன செய்யட்டும் நான்

என்று கேட்டால்

நாக்கூசாமல்

நான் வரும்வரை

விரல்கொண்டு விளையாடு

என்கிறாய்

டேய் பைத்தியக்காரக் கூதி

நான் ஒன்றும் நிதம்பத் துளை

மட்டும் அல்லடா மூடா

என் தேகம் முழுவதுமே

நிதம்பமாகி என்னை

வெறி கொள்ள வைக்கிறது

எனக்கு உன் முத்தம் வேண்டும்

என் தொண்டைக்குழிக்குள்

உன் நா செல்ல வேண்டும்

என் முடிக்கற்றைகளை நீ

பற்றியிழுக்க வேண்டும்

பின்னங்கழுத்தில் உன் சுவாசம்

திகழ வேண்டும்

என் தொடைகளிலும்

விம்மித் தணியும் முலைகளிலும்

உன் பற்களும் நகங்களும்

தடம் பதிக்க வேண்டும்

என் நாபிச்சுழியில் உன்

நா

சுழன்று ஆட வேண்டும்

என் பாதங்களிலிருந்து கிளம்பி

உச்சந்தலை வரை

உனக்கு என்னைத்

தின்னக்

கொடுக்க வேண்டும்

எதுவுமே முடியாமல்

என்னையும் அறியாமல்

தேகம் நடுங்க

கண்களிலிருந்து

பெருக்கெடுத்து ஓடுகிறது

கண்ணீர்

ஏன்டா என்னை இப்படிப்

பைத்தியமாக்கினாய்

பைத்தியக்காரக் கூதி