காலத்தைக்
கால்பந்தாக்கி விளையாடி
இறுமாந்து கிடந்திருந்தேன்
இப்போது
உன் வருகைக்குப் பிறகு
உனக்கும் எனக்குமான
கால இடைவெளியின்
பூதாகாரம் கண்டு,
எந்தக் கவலையுமில்லாமல்
காலத்தை அளந்துகொண்டிருந்த
மணற்கடிகையை
உடைத்து விட்டேன்
இப்போது
எண்ணிறந்த மணற்துகள்கள்
முள்ளில்லாத கடிகாரமென எரிந்து
கொண்டிருக்கிறது
சூரியன்