புதிர்


அந்த ஐந்து நட்சத்திர விடுதியின்

மதுபானக் கூடம்

எனக்குப் பிடித்தமானது

திறந்த வெளி

வேப் புகைக்கத் தடையில்லை

கண்ணெதிரே நீச்சல் குளம்

இறங்கிக் குளிக்கப் பிடிக்காது

பார்க்கப் பிடிக்கும்

எப்போது போனாலும்

நீச்சல் குளத்தில்

சிரித்த முகம் கொண்ட

அந்த சிரிப்பு நடிகர்

நீச்சலடித்தபடியே இருப்பார்

அறுபது வயது

என்கிறது விக்கிபீடியா

முப்பது கூட சொல்ல முடியாது

ஒருநாள் மாரடைப்பில் காலமானார்