இன்று மாலை டாக்டர் பாஸ்கரன் புத்தக வெளியீட்டு விழா

இன்று மாலை ஐந்தரை மணி அளவில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். எல்லோரும் வரலாம். அழைப்பிதழ் கீழே. இடம் டி.நகர் சோஷியல் கிளப், நாகேஸ்வரன் ரோடு, சென்னை.

தம்பியின் வாழ்த்து

Perumalmurugan Oct 30, 2024 Crossword Book Awards மொழிபெயர்ப்பு நூல் பட்டியலில் Fire bird உள்ளது. ஆளண்டா பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி விருது பெற்ற நாவல். கிராஸ்வேர்டு விருது வாசகர்கள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையிலானது. வெவ்வேறு தலைப்புகளில் உள்ள பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர்களில் சிலர் தம் நூலுக்கு வாக்களிக்கும்படி பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள். *** தம்பியின் வாழ்த்து கிடைத்து விட்டது. எனவே எல்லோரும் நான்தான் … Read more

பூலோக சொர்க்கம் – 2

இருபத்தைந்து வயது வரை என் வாழ்க்கை பேரரசனின் வாழ்க்கையாக அமைந்தது.  அதிலிருந்து நாற்பது வயது வரை தெருநாய் வாழ்க்கை.  நாற்பதிலிருந்து எழுபது வரைதான் ஓரளவுக்கு என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.  ஒரே ஒருமுறை என் மகனுக்காக என் நண்பரிடம் கடன் வாங்க நேர்ந்தது.  சொன்ன தேதியில் மகன் பணத்தைத் திருப்பவில்லை.  அது கூடப் பரவாயில்லை.  அது பற்றி அவன் என்னிடம் பேசவும் … Read more

பூலோக சொர்க்கம் – 1

1. என் வருமானத்தைத் தாண்டி எனக்குப் பணம் தேவைப்படுவது என்னுடைய பயணங்களுக்காகத்தான். ஏன் பயணம் செய்ய வேண்டும்?  பயண நூல்களைப் படித்தால் போதாதா? போதாது.  ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்தே ஆக வேண்டும்.  ஆயிரம் பயண நூல்களைப் படித்தாலும் நமக்கே நமக்கென்று கிடைக்கும் அனுபவங்கள் தனியானவை. ஒரு ஜப்பானிய உதாரணத்தைச் சொல்கிறேன். இந்த முறை நான் ஜப்பான் சென்றது இரண்டாவது தடவை.  சென்ற ஆண்டும் அக்டோபரில்தான் சென்று வந்தேன்.  இந்த முறையும் அப்படித்தான்.  இந்த முறை இரண்டு … Read more