குற்றங்கள் நடுவே பிறந்த ஞானி

ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் ஞானி என்றும் கிரிமினல் என்றும் அழைக்கப்பட்ட ஜான் ஜெனே, 1910-ஆம் ஆண்டு பாரிஸில் 21 வயது பாலியல் தொழிலாளி ஒருவருக்குப் பிறந்தார். அவர் ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தாய் இறந்துபோனதால் அரசாங்கத்தின் அனாதை இல்லங்களில் வளர்ந்தார். அப்பா யார் என்று தெரியாது. அனாதை இல்லத்திலிருந்த சிசுவை ஒரு தச்சர் குடும்பம் தத்தெடுத்தது வேறு ஓர் ஊருக்கு எடுத்துச் சென்றது. பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஜெனே, வெளியே எல்லா ‘கெட்ட பழக்கங்’களையும் … Read more

சீனத்துக் குதிரைகள்

இப்போதைய பாராளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக இருக்கப் போவது எது என்று அர்னாப் கோஸ்வாமி தலைமையில் விவாதம்.  கமல்ஹாசன் மற்றும் ஸ்மிருதி இரானி. இதற்கு முந்தைய தேர்தலில் மையப் பொருளாக இருந்தது எது என்பதைப் பார்த்தால் இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.  கடந்த தேர்தலில் ஊழலும் விலைவாசி உயர்வுமே பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் அலையாகத் திரண்டு மோடிக்கு வாக்களித்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்சியில் காங்கிரஸ் அளவுக்கு (2 ஜி) … Read more

நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…

கார்ல் மார்க்ஸ் நூல் (ராக்கெட் தாதா) வெளியீட்டு விழாவின் போது எதார்த்த வாதத்தின் காலம் முடிந்து விட்டது; வேறு விதமான கதைகளை எழுதுவோம் என்று பேசினேன்.  அப்போது தமிழில் எழுதப்பட்டது எல்லாமே எதார்த்தவாதக் கதைகள்தாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.  ஆனால் எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், என்னுடைய ஸீரோ டிகிரி, நான் எழுதிய சிறுகதைகளான நேநோ, the joker was here, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து … Read more

விழா : சிறுகதை

என்னுடைய வாசகர் வட்டத்தின் உள் அமைப்பில் உள்ளவர் அந்த நண்பர்.  பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம்.  ஜனவரி இறுதியில் போன் செய்தார்.  மார்ச்சில் எங்கள் நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளது;  நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார்.  ஏதோ ஒரு தேதி சொன்னார்.  21 என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காலண்டரைப் பார்த்தேன்.  அந்தத் தேதியில் வேறு எதுவும் நிகழ்ச்சி இல்லை.  சரி, வருகிறேன்; ஆனால் ஒரு விஷயம் ராஜா என்றேன்.  என்ன சாரு?  எனக்குப் … Read more

அறம் தொலைத்த சமூகம் (2)

ரகு என் புத்தகங்களில் ஒன்றை மொழிபெயர்த்தவர்.  100 பக்க புத்தகம்.  இதற்கு சன்மானமாக ஒரு தொகை கொடுக்க வேண்டுமானால் 5000 ரூ. கொடுக்கலாம்.  ஒரு பக்கத்துக்கு 50 ரூ.  உண்மையில் ஒரு வார்த்தைக்கு 50 ரூ. கொடுப்பதுதான் நியாயம்.  ஆனால் 20 பிரதிகள் விற்கும் ஒரு சமூகத்தில் பக்கத்துக்கு அம்பது கொடுப்பதுதான் சாத்தியம்.  நண்பரிடம் பணம் வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி புத்தகம் போடும் பதிப்பக நண்பருக்கு … Read more