”எழுதாதவன் எழுதியிருக்கும்
கவிதை எப்படியிருந்ததென்று சொல்”
என்றேன்.
”நட்சத்திரங்களின் காலம்
கற்பனையில் எட்டாதது
புழுக்களின் காலம்
கண் சிமிட்டலில் முடிந்து போகும்
கண் சிமிட்டும் காலத்தில்
நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய்
ஒரு
அதிசயத்தை
எப்படியென்று
யாரால் விளக்க முடியும் அன்பே?”
என்கிறாய்.