புதிய புத்தகங்கள்

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்: https://tinyurl.com/ozhungimayin *** கடவுளும் சைத்தானும்: https://tinyurl.com/kadavulum *** அஸாதி அஸாதி அஸாதி: https://tinyurl.com/y57ua7f7 *** மூடுபனிச் சாலை: https://tinyurl.com/yxlcyttl *** கனவுகளின் மொழிபெயர்பாளன்: https://tinyurl.com/kanavugalinmozhi

மயானக் கொள்ளை – விமர்சனம் – அ. ராமசாமி

சாருவின் மயானக்கொள்ளை ==========================தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாரு நிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப்பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பவாழ்வில் பெண்களும் … Read more

சீலே பயணம்

SOTC ட்ராவல் கம்பெனியின் அணுகுமுறை மிகவும் professional-ஆக இருக்கிறது. ப்ரஃபஷனல் என்றால் அதன் அடிப்படை அம்சம், தொடர்பு கொள்ளுதல்.  பயணத் திட்டத்தை உங்களுக்கு நான்கு நாட்களில் அனுப்பி வைக்கிறேன் என்றார் கம்பெனி பிரதிநிதி.  சொன்னபடியே அனுப்பி விட்டார்.  அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் பேசினார்.  நான் சந்தியாகோவில் மேலும் இரண்டு நாட்கள் தங்க வேண்டுமே என்றேன்.  ஓ, தங்கலாமே என்றார்.  அந்த இரண்டு நாட்களும் எனக்குப் பயண உதவியாளர் வேண்டுமே என்றேன்.  அதெல்லாம் நீங்கள் கேட்காமலேயே செய்யப்படும் என்றார்.  … Read more

விநோத ரஸ மஞ்சரி (2)

சீனி ஒரு சம்பவம் சொன்னார்.  அவர் அடிக்கடி மலேஷியா செல்பவர்.  பலமுறை மலேஷிய நண்பர்கள் அவரிடம் செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்களாம்… ”என்னா தல எங்க ஊர்ப் பக்கம் வந்தா சொல்லக் கூட மாட்டேன்றிங்க… முன்னாடியே சொன்னீங்க வந்து பாத்து கவனிப்போம்ல.” சீனி இளைஞர்.  அதனால் இந்த விஷயத்தில் என் அளவுக்கு அனுபவம் இல்லை.  அதனால் அந்த நண்பர்களின் வார்த்தைகளை நிஜமென்று நம்பி அடுத்த முறை முன்கூட்டியே சொல்லி விட்டார்.  ஒருத்தரிடமிருந்தும் பதிலே இல்லை.  ஒருத்தர் என் பொண்டாட்டிக்குத் … Read more

விநோத ரச மஞ்சரி

சாரு ஆன்லைனுக்குக் கட்டணம் கட்டியும் படிக்கலாம்; கட்டாமலும் படிக்கலாம்.  பணம் என்பது எப்போதுமே என் சிந்தனையில் இருந்ததில்லை.  அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் ஒரு காகிதம் என்ற அளவில் மட்டுமே பணத்தை மதிக்கிறேன்.  அதே சமயம், இனிமேற்கொண்டு எதையுமே இலவசமாகச் செய்வதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன்.  விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு.  சமீபத்தில் ந. சிதம்பர சுப்ரமணியனின் புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன்.  இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறேன்.  ஆனால் நாகேஸ்வர ராவ் … Read more

பஜெநாத்தோ

மேலே உள்ள இணைப்பில் உள்ள பாடலைக் கேட்டு விட்டு இதைப் படித்தால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.  பாடலைப் பாடியவர் கார்லோஸ் பீபெஸ் (Carlos Vives).  ஸ்பானிஷில் v-ஐ b-ஆகத்தான் உச்சரிப்பார்கள்.  இந்தியாவில் வங்க மொழியிலும் அப்படித்தான்.  நாம் வசந்தி வங்காளிகள் பசந்தி என்பார்கள்.  நமக்கு ரவீந்திரநாத்.  அவர்களுக்கு ரபீந்திரநாத்.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், கொலம்பியாவின் மிகப் புகழ்பெற்ற இசை வடிவமான பஜெனாத்தோ பாணி பாடல் இது.  ரோமன் லிபியில் Vallenato.  இதன் உச்சரிப்புதான் பஜெநாத்தோ.  … Read more