அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியவன்

க்ராஸ்வேர்ட் விருது குறும்பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் என்னுடைய நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novelஉம் இடம் பெற்றுள்ளது. கூடவே கேரள எழுத்தாளர் ஏ.ஜே. தாமஸின் நூலும் உள்ளது. இந்நேரம் கேரளத்தில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் இது பற்றிய விரிவான செய்தி அவரது புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வந்திருக்கும். ஒவ்வொரு தினசரிக்கும் லட்சக்கணக்கில் வாசகர்கள் உண்டு. ஒவ்வொன்றுக்குமாக முப்பதாயிரம் என்றாலும் இந்நேரம் அறுபதாயிரம் பேர் தாமஸின் நூலுக்கு வாக்களித்திருப்பார்கள். எனக்கு … Read more

Crossword Book Awards…

Crossword Book Awards – Crossword.in Crossword Book Awards இந்தியாவில் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படுகிறது. இதன் குறிப்பிட்ட அம்சம் இதைத் தேர்ந்தெடுப்பது ஒரு குழு அல்ல, வாசகர்கள். இந்த விருதுக்கு இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூல்களுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb: A Novel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேலே செல்ல வேண்டுமானால் நீங்கள் இதற்கு வாக்கு அளிக்க வேண்டும். அதற்கான விவரம் மேலே உள்ள இணைப்பில் உள்ளது. உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.

திரும்பி விட்டேன்…

இரண்டு வார ஜப்பானியப் பயணம் இனிதே முடிந்து நேற்று (24.10.2024) நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தேன். பொதுவாக என் தோற்றத்தின் காரணமாகவோ என்னவோ கஸ்டம்ஸில் என்னை வாட்டி எடுப்பார்கள். நேற்று அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை. ஜப்பான் ஒரு சில விஷயங்களில் மலிவாகவும் ஒரு சில விஷயங்களில் நம்ப முடியாத அளவுக்கு செலவு வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இப்போது ஆகியிருக்கும் செலவில் நான் இரண்டு வாரம் சீலே, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்க முடியும். சீலேயில் … Read more

அன்னையர் தினம்

(மீள் கட்டுரை) மே 13, 2018 இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது. முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர். இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை. என் மீது நம்பிக்கையும் தேவை. என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன். இதுதான் மிகவும் முக்கியம். நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் … Read more

தோக்கியோவில் ஒரு சந்திப்பு

அக்டோபர் 20 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு துளிக்கனவு இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் சாருவையும் அராத்துவையும் சந்திக்கலாம். இடம்: செய்சின்ச்சோ கம்யூனிட்டி ஹால், தோக்கியோ