அம்மாவின் பொய்கள்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்றால் என் வீட்டு மாடியில் ஆன்மிக வகுப்பு நடக்கும். சுமார் முப்பது பேர். இந்த ஆன்மிக வகுப்புக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு விஷயம், நான் வளர்க்கும் ஸோரோ. க்ரேட் டேன் வகை நாய் என்பதால் மூன்று அடி உயரம், ஐந்தடி நீளம். முன்னங்காலைத் தூக்கி நின்றால் ஒன்பது அடி. இப்படி ஒரு பிராணி நடமாடும் வீட்டுக்கு வர யாருக்குத் துணிவு வரும்? ஆனாலும் ஆன்மிக வகுப்புக்கு வரும் யாரும் இதுவரை ஸோரோவைக் … Read more

வர்ண மேகங்களிடையே இருந்து… (நெடுங்கதை) மனுஷா ப்ரபானி திஸாநாயக்க சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

(ஒரு முன்குறிப்பு: மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை … Read more

சான்றோர் சென்ற நெறி

அஞ்சல் துறையில் ஓய்வு ஊதியம் பெறுவதற்கு ஒரு ஏடிஎம் அட்டை கொடுத்திருக்கிறார்கள். அது இந்த அக்டோபருடன் முடிவுக்கு வருகிறது. அதைப் புதுப்பித்துக் கொள்வதற்காக நானும் அவந்திகாவும் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சென்றோம். பொதுவாக நாங்கள் இருவருமே அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனென்றால், பார்க்கின்ற அத்தனை பேருமே “ஏன் இளைத்துப் போய் விட்டீர்கள், ஷுகரா?” என்று கேட்டு அதற்கு நாலாவிதமான மருத்துவமும் சொல்வார்கள். திரும்பி வரும்போது நம்மை ஒரு பிரேதமாகவே மாற்றித்தான் அனுப்புவார்கள். … Read more

தலைப்பிடப் படாத ஒரு குறுங்கதை: காயத்ரி. ஆர்

செப்டம்பர் 30,2024 சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு தூக்கக் கலக்கத்தில் தள்ளாட்டமாய் பால்கனியில் நின்று பார்த்தேன். பூனைக்குட்டி எதிர் அபார்ட்மெண்டில் இருக்கிறது போல. கியா கியாவென்று சத்தம் அதிகமாக இருந்தது. பல் தேய்த்துவிட்டு கீழிறங்கிப் பார்க்கலாம் என்று பேஸ்டை பிரஷ்ஷில் … Read more

சிவப்பு நிற உதட்டுச் சாயம்: சிறுகதை: டானியல் ஜெயந்தன்

நான் தமிழில் இளைஞர்களின் கதைகளைப் படிப்பதில்லை என்று எழுதியிருக்கிறேன். முதல் பத்தியையே தாண்ட முடியாத அளவுக்கு இலக்கணப் பிழைகள் மலிந்திருப்பதுதான் முக்கியக் காரணம். ருசியான உணவில் கல் கிடந்தால் என்னதான் ருசியாக இருந்தாலும் எப்படி உண்ண முடியும்? ஆனால் டானியல் ஜெயந்தனின் இந்தக் கதையில் அப்படிப்பட்ட கற்கள் எதுவுமே இல்லை. ஆற்றொழுக்கான நடை. சே, நானே இப்படி எழுதிவிட்டேனே? கையோடு நம்மை அழைத்துச் செல்லும் சுவாரசியமான நடை. சுவாரசியமான கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உங்களோடு … Read more