சில தினங்களுக்கு முன்பு ஒரு வாசகரிடமிருந்து வாட்ஸப் மெஸேஜ் வந்தது.
“இரண்டொரு நாளில் புனேவிலிருந்து சென்னை வருகிறேன். நானும் என்மனைவியும் என் இரண்டு மகள்களும் (மூத்தவளுக்கு ஆறு வயது, அடுத்தவளுக்கு மூன்று வயது) தங்களை வந்து சந்திக்க விரும்புகிறோம். நேரம் கிடைக்குமா?”
“அப்போது நீங்கள் பிஸியாக இருந்தால் மீண்டும் 26ஆம் தேதி சென்னை வருகிறேன். மே 2 வரை இருப்பேன். அந்த நாட்களில் ஒருநாள் தங்களை வீட்டில் வந்து சந்திக்க முடியுமா?”
அடிப்படையில் நான் ஒரு முட்டாள். இருந்தாலும் கொஞ்சம் புத்தி வேலை செய்ததால் இரண்டொரு தினங்களில் முடியாது, 27ஆம் தேதி சந்திப்போம் என்று எழுதி விட்டேன்.
ஏனென்றால், அவந்திகா 26ஆம் தேதி துபய் போகிறாள். மே 26 திரும்பி வருகிறாள். அதனால் 27 அன்று சந்திக்கலாம் என்று எழுதி விட்டேன். ஆனால் மறுநாள்தான் எனக்கு உறைத்தது. என்ன அடிப்படையில் அவர் சந்திக்க வருகிறார்? என்ன அடிப்படையில் நாம் அவரைச் சந்திக்கிறோம்?
நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? துபய் போன்ற வளைகுடா நாடுகளில் பார்த்திருக்கிறேன். ஐம்பது டிகிரி செல்ஷியஸ் வெய்யிலில் பதினெட்டாவது மாடியில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். தமிழர்கள். காலை ஆறு மணிக்கே பணியிடத்துக்கு ட்ரக்கில் கொண்டு செல்லப்படுவார்கள்.
என் நிலைமையும், அவந்திகாவின் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான். பத்து பூனைகளாலும், அவந்திகாவின் அணுகுமுறையின் காரணமாகவும் என் வீட்டில் பணிப்பெண்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள். அவந்திகாவின் அணுகுமுறைக்கு உதாரணமாக நூறு பக்கங்கள் எழுதலாம். ஒன்றே ஒன்று.
வேலைக்கு வரும் பணிப்பெண்ணிடம் அவந்திகா முதல் நாள் சொல்லும் உத்தரவு:
இதோ பாருங்கம்மா, எனக்குப் பொய் சொன்னாப் பிடிக்காது. உண்மை மட்டும்தான் பேசணும். சரியா?
இந்த அடியிலேயே பணிப்பெண் நிலைகுலைந்து விடுவார்.
அடுத்த உத்தரவு:
உள்ளே நுழைந்ததுமே பாத்ரூமுக்குப் போய் கை காலெல்லாம் சுத்தமா கழுவிடணும், சரியா?
இந்த இரண்டு சோதனைகளையும் தாண்டிவிட்டால் பணிப்பெண்களின் அட்டகாசம் தொடங்கும்.
பாத்திரம் எல்லாம் அரையும் குறையுமாகத் தேய்க்கப்பட்டிருக்கும்.
கும்பிடு போட்டு அனுப்பி விடுவாள்.
இதனால் கடந்த ஆறேழு ஆண்டுகளாக நானும் அவந்திகாவுமாகத்தான் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறோம். பத்து பூனைகள் என்பதால் எடுபிடி வேலைகள் எனக்கு அதிகம். சமையல் வேலையிலும் நான்தான் 75 சதவிகிதம் பங்கெடுக்கிறேன்.
உடம்பில் தெம்பு இல்லாததால் அவந்திகா கொலைவெறியுடன் தான் வீட்டு வேலைகள் செய்வாள். ஒருநாள் பாத்திரம் தேய்க்கும்போது கொலைவெறி அதிகமாகி பாத்திரங்களைப் போட்டு உடைத்தாள். சத்தத்தினால் பயந்து போன டெட்டி தெறித்து ஓடியதில் என் கால் பாதத்தில் அதன் நகம் பட்டு, கத்தியால் வெட்டியது போல் ரத்தம் கொட்டியது. இதுவே அவந்திகாவுக்கு நடந்திருந்தால் ஊரையே கூட்டி அதகளம் பண்ணியிருப்பாள். நான் வாயையே திறக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்குப் பயந்து கொண்டே அவந்திகா இல்லாத சமயத்தில் ஏதோ கஞ்ஜா கடத்துவது போல நானே பாத்திரம் தேய்த்து விடுவது. நான் பாத்திரம் தேய்ப்பதைக் கண்டால் அவந்திகா மிகவும் பதற்றம் ஆகி விடுவாள். மற்றபடி ஒரு நாளில் பத்து மணி நேரம் நான் எடுபிடி வேலை செய்தாலும் அவளுக்கு ஒன்றும் ஆகாது.
இந்த ரகளையில் நான் சாப்பிடவே மதியம் மூன்றரை ஆகி விடும். அவந்திகா சாப்பிடுவது நாலரை.
நான்கு மணிக்கு எழுத ஆரம்பித்தால் பத்து மணி வரை தொந்தரவு இருக்காது.
இந்த வாழ்க்கை பற்றி நான் நூறு கட்டுரைகள் எழுதி விட்டேன். அன்பு என்ற நாவலையும் எழுதி விட்டேன். இது எதையும் படிக்காமல் குடும்பத்தோடு உங்கள் வீட்டுக்கு வந்து பார்க்கலாமா என்று கேட்கிறார்கள்.
உங்களுக்கெல்லாம் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா?
இத்தனைக்கும் அந்த வாசகர் இதுவரை எனக்கு ஒரு நயாபைசா சந்தாவோ நன்கொடையோ அனுப்பியதில்லை. எல்லாமே ஓசி.
அவந்திகா காலை உணவே மதியம் பன்னிரண்டரை மணிக்குத்தான் சாப்பிடுகிறாள். இரவு பத்து மணிக்குத்தான் அவளுக்குக் குளிக்க நேரம் கிடைக்கிறது.
பல சமயங்களில் எனக்கு நான் ஒரு மனநோய் விடுதியில் வாழ்வது போலவே இருக்கும். இந்த நிலையில்தான் நான் படித்துக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும், இசை கேட்டுக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.
இதையெல்லாம் நூறு முறை எழுதியும்தான் வீட்டில் வந்து சந்திக்கவா என்று கேட்கிறார்கள். அதிலும் குடும்பத்தோடு வந்து பார்க்கலாமா?
என் வீட்டுக்கு இதுவரை சீனி வந்ததில்லை.
என் பப்ளிஷர் ராம்ஜி வந்ததில்லை.
காயத்ரி வந்ததில்லை. (ஒரே முறைதான் வந்தார். அதன் பூகம்ப அதிர்ச்சி அடங்க இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும்போல் தெரிகிறது!)
செல்வா வந்ததில்லை.
ராஜா வந்ததில்லை.
குமரேசன் வந்ததில்லை.
நந்தினி வந்ததில்லை.
ஸ்ரீ வந்ததில்லை.
வளன் வந்ததில்லை.
வீட்டுக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கவா என்று கேட்கும் நண்பரிடம் ஒன்று கேட்டேன். இல்லை, இரண்டு கேள்விகள். அன்பு படித்திருக்கிறீர்களா?
இல்லை என்றார்.
அன்பு நாவலைப் படிக்காதவர்களை நான் சந்திக்கவே விரும்ப மாட்டேன். மேலும், அன்பு நாவலைப் படித்திருந்தால் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டார்.
இரண்டாவது கேள்வி. என் தளத்தைப் படிக்கிறீர்களா?
தினமும் படிக்கிறார்.
அப்படியானால் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்டார்?
வளன் கதையைச் சொல்கிறேன்.
வளன் அமெரிக்காவில் பாதிரியாராக இருக்கிறான். என் வளர்ப்பு மகன். பதினாறு வயதிலிருந்து என் வாசகன். என் மாணவன். ஒருமுறை தமிழ்நாடு வந்திருந்தபோது அமெரிக்கா திரும்பும் அன்று என்னைப் பார்ப்பதற்காக சாந்தோம் வந்தான். என் குடியிருப்பின் வெளிவாசலில் நின்றபடி எனக்கு ஃபோன் செய்கிறான்.
ஐந்து நிமிடம் சந்திக்க முடியுமா?
நான் அப்போதுதான் ஒரு கோவா பயணத்தை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தேன். வீடு எரிமலை போல் இருந்தது. கீழே போய் வருகிறேன் என்று சொன்னாலே கொலை நடக்கும்.
“இல்லை வளன், சந்திக்க முடியாது. அடுத்த முறை பார்க்கலாம்” என்றேன். அடுத்து அவனைப் பார்க்க மூன்று வருடம் ஆகியது.
இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் வந்து குடும்பத்தோடு வீட்டுக்கு வரவா, பார்க்கலாமா என்று கேட்கும் நபரை என்ன செய்யலாம்?
உங்களுக்கெல்லாம் இந்த உரிமையை எவன் கொடுத்தது? ஜக்கி வாசுதேவிடம் போய் இப்படிக் கேட்பீர்களா?
மிகச் சுருக்கமாக அவருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். அதற்கு அவர் ஒரு பதில் அனுப்பினார். அதில் இவ்வாறு கண்டிருந்தது:
”உங்களோடும் உங்கள் குடும்பத்தாரோடும் பிள்ளைகளோடும் சில தினங்கள் தங்கி நான் பேசுகிறேன். உரையாடுகிறேன். அவர்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கும். அவர்கள் வாழ்வு மேன்மையுறும்.
எத்தனை தினங்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்களுடனே நான் தங்குவேன்.
அல்லது, நீங்களே கூட உங்களுக்குப் பிரியமான இடத்தில் என்னைத் தங்க வைத்து நாம் உரையாடலாம்.”
இவை என் வார்த்தைகள். சாருவுடன் சில தினங்கள் என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஆனால் அடுத்த வாக்கியத்தை நண்பரின் பதிலில் காணோம். அடுத்த வாக்கியம் இது:
”கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். என்னை வரவழைக்கும் பயணச் செலவையும் நீங்கள் ஏற்க வேண்டும்.”
சந்தா, நன்கொடை என்று ஒரு நயாபைசா கொடுக்காதவர் வீட்டுக்கு வரவா என்கிறார். நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் என் வீட்டுக்கு வந்து என்னைக் காண முடியாது. நான்தான் வெளியே வருவேன். ஏனென்றால், நான் வாழ்வது ஒரு சிறையில்.
இந்த வீடு ஒரு சொர்க்கமாக இருந்திருக்கலாம். அதற்கு அவந்திகா என் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். லக்கி என்ற ஒரே ஒரு பூனை இருக்கும்போதே அதற்கு கர்ப்பத்தடை செய்து விடலாம் என்று சொன்னேன். இயற்கை வழியில் குறுக்கிடக் கூடாது என்று மறுத்து விட்டாள். இப்போது பத்து பூனைகள். பிறகு பத்து பூனைகளுக்கும் neuter/spay அறுவை செய்தோம். ஒரு லட்சம் ரூபாய் ஆயிற்று. கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவந்திகா என் பேச்சை ஒரு சமயம்கூடக் கேட்டதில்லை. கேட்டிருந்தால் அவள் வாழ்வு பிரமாதமாக இருந்திருக்கும். என் வாழ்வும்தான்.
வீட்டுக்கு வரவா என்று கேட்ட நண்பர் தினமுமே என் தளத்தை வாசிக்கிறாராம். சோதனை!
***
நான் தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறேன். தமிழ்ச் சமூகம் முழுமையாகவே ஃபிலிஸ்டைன் சமூகமாக மாறி விட்டது. எழுத்தாளர்களில் பெரும்பகுதியினர் மனநோய் பீடித்துத் திரிகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக இருக்கிறது. நாலா பக்கங்களிலிருந்தும் கற்கள் வீசப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஷாஜி ஒரு நேர்காணல் கேட்டார். கொடுத்தேன். இப்போது அதை பொதுமக்கள் காண்பதற்குப் பகிர்ந்திருக்கிறார். அதன் பின்னூட்டத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் என்னைப் பற்றி “லூசுக்கூதி, மெண்டல் புண்டை” என்பது போன்ற வார்த்தைகளில் அர்ச்சனை செய்திருக்கிறார்கள். ஒருத்தர் பாக்கியில்லாமல் என்னை அவன் இவன் என்று ஒருமையிலேயே திட்டியிருக்கிறார்கள். காரணம் என்ன?

எழுத்தாளன் என்றாலே வெறுப்பு. காரணம், தமிழ்ச் சமூகம் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம். ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான். ராஜாஜி பாரதியை வெறுத்தார். புதுமைப்பித்தனை வெறுத்தார். இப்போது சமூகம் முழுமையுமே எழுத்தாளனை வெறுக்கிறது.
ஒருத்தன் என்னைப் புளிச்ச மாவு என்று திட்டுகிறான்.
இன்னொருத்தன் அவனைத் திருத்துகிறான். அது இந்த மெண்டல் புண்டை இல்லை. அது ஜெயமோகன்.
உடனே இன்னொருத்தன் ”இல்லை, இல்லை, அது எஸ்.ரா.” என்கிறான்.
ஒரு மளிகைக்கடையில் சண்டை போட்டவனெல்லாம் எதுக்குடா வந்து எழுதறீங்க?
மலத்தில் நெளியும் இந்தப் புழுக்களுக்கு சாருவும் ஒன்றுதான், ஜெயமோகனும் ஒன்றுதான், எஸ்.ரா.வும் ஒன்றுதான். இப்போது எனக்கு ஏண்டா ஷாஜிக்குப் பேட்டி கொடுத்து இப்படி ஓத்தாம்பாட்டு வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் எனக்கு என்ன லாபம்? ஓத்தாம்பாட்டு வாங்கியது மட்டுமே லாபம்? மற்றபடி ஒரு பைசா லாபம் இல்லை.
ஆங்கிலத்தில் எழுதினால் இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை பாருங்கள்.
நேற்று கூட தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொலைக்காட்சி சேனலின் நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறுத்து விட்டேன். சல்மான் ருஷ்டியெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா என்ன?
நேற்று குறிப்பிட்ட இரண்டு நூல்களின் அட்டைப் படங்கள் இவை. எனக்குப் பிடித்த படங்கள். ஓவியர் நெகிழனுக்கு என் அன்பும் நன்றியும்.

என் கட்டுரைகளையும் மற்ற படைப்புகளையும் இந்தத் தளத்தில் வாசிப்பதற்கு நீங்கள் சந்தாவோ நன்கொடையோ அளிக்க விரும்பினால் அதற்குரிய விவரங்கள்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai