மூன்று கவிதைகள்

1.மௌனம் இதுவரை அறிந்த மௌனம் ரம்யம் நீ வந்த பிறகு அறியுமிந்த மௌனம் குருதி கொப்புளித்தோடும் ரணகளம் எத்தனையோ ஆயிரம் பேர் அறிந்த மௌனம் பாடிய மௌனம் துக்கித்த மௌனம் உடலைத் துறந்து உயிரை மாய்த்த மௌனம் ஏடுகளில் படித்ததுண்டு பாடல்களில் கேட்டதுண்டு வாதையாய் அறிந்ததில்லை சாட்சியாய் நகரும் நிலவே கூழாங்கற்களை அடித்து விளையாடி ஓடும் நதியே இலைகள் சலசலக்க சரசமாடிச் செல்லும் தென்றலே அவளிடம் இதை மறக்காமல் சொல்லி விடுங்கள் நானொரு சொல்லாகி சொல்லுக்குள் மறைந்து … Read more

(நீலம் இலக்கிய விழாவில் பேசியதை முன்வைத்து ஒரு கட்டுரைத் தொடர்) 1.சமூகப் போராளியும் எழுத்தாளனும்…

ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஒரு காட்சி. ஜூலியஸ் சீஸர் கொல்லப்பட்டதால் ரோமானியர்கள் பதற்றமடைகிறார்கள்.  அந்தக் கொந்தளிப்பான சூழலில் மார்க் ஆண்டனி அவனது பிரசித்தி பெற்ற இரங்கல் உரையை ஆற்றுகிறான்.  அந்த உரையின் காரணமாகத் தூண்டப்பட்டு கடும் கோபத்துக்கு ஆளான கூட்டம் ப்ரூட்டஸையும் அவன் நண்பர்களையும் கொல்லத் துடிக்கிறது.  நகரம் முழுவதும் கூச்சல் குழப்பம். இங்கே சின்னா என்பவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் இரண்டு சின்னா வருகிறார்கள்.  ஒரு சின்னா, சீஸரைக் … Read more