விஜய் ரசிகரிடமிருந்து மிரட்டல்

மெர்சல் படம் பற்றி பின்வரும் வார்த்தைகளை ட்விட்டரில் இன்று காலை பதிவு செய்திருந்தேன். ”வெற்றி – விஜய் – ஹீரோ டேனியல் – எஸ்.ஜே. சூர்யா – வில்லன் இந்தக் காலத்திலுமா இப்படி? இன்னும் நீங்க திருந்தவே மாட்டீங்களா?” மேற்கண்ட குறிப்புக்கு வந்த மிரட்டல் கடிதம் கீழே:   mersal vijay <61mersalvijay@gmail.com> 1:37 PM (2 hours ago) to me sir if u give any negative reviews about vijay starrer … Read more

வயது

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் என்னை பெருசு என்று குறிப்பிட்டார்.  விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.  பொருட்படுத்தவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும், உங்களுக்கு வயதாகி விட்டது என்றார்.  பிறகு இன்றும் அதே பேச்சை அவரிடமிருந்து கேட்க நேர்ந்தது.  ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால் அவருக்கு நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை.  அறுபதுக்கு மேல் ஆனால் வயதாகி விட்டது என்பது ஒரு அணுகுமுறை.  ஆனால் 90 வயது ஆனாலும் வயதாகாது என்பது இன்னொரு அணுகுமுறை.  எங்கள் … Read more

நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி…

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஒரு அரசியல் நிகழ்ச்சி. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் கோஷ்டிகள் பிரிந்து ஒரே வெப்பமாக இருந்த சூழல். என் பேச்சின் இடையே முன் வரிசையில் இருந்த பலர் சத்தம் போட்டு பேச்சை நிறுத்தி விட்டனர். இரண்டு நிமிடங்கள் கழித்தே பேச்சைத் தொடர முடிந்தது. நிகழ்ச்சி முடிந்தும் போலீஸ் பாதுகாப்புடன் தான் திரும்ப முடிந்தது. நாளை மாலை ஆறு … Read more

சட்டசபையில் கமல்ஹாசன்…

கமல் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று இங்கே எழுதியிருந்தேன். கமல் சரத்குமார் அல்ல என்பது நமக்குத் தெரியும். நான் எழுதியிருந்ததன் உள்ளர்த்தம், அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் கட்சிக்கு ஒன்று இரண்டு சீட் கிடைப்பது கூட நிச்சயம் இல்லை என்பதுதான். கமலுக்கும் டெபாசிட் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் திமுகவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் காப்பாற்றப்படும். ஆனால் வேறு எல்லா விஷயங்களும் கப்பல் ஏறி விடும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் … Read more