Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ.
இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்:
https://www.youtube.com/watch?v=1ej1SI4BRv8
இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் கண்களைத் திறக்கக் கூடாது என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். கவனம் தப்பி விடும்.