கிரிக்கெட்டில் இன்னமும் ஐந்த நாள் ஆட்டம் இருக்கிறது அல்லவா, அதைப் போலவே ஸிம்ஃபனி என்ற இசை வடிவமும் இன்னமும் உருவாக்கப்பட்டு, ரசிக்கப்பட்டும் வருகிறது. நமக்கு மேற்கத்திய ஜனரஞ்சக இசை வடிவங்களே பரிச்சயமாக இல்லாததால் ஸிம்ஃபனி என்ற சாஸ்த்ரீய இசை வடிவம் இன்னமும் அதிக தூரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தின் கலாச்சார ரசனை பெருமளவுக்கு மாறி விட்டதும் ஒரு காரணம். இலக்கியத்தில் பார்த்தாலும் இந்த ரசனை மாற்றத்தைத் தெளிவாக உணரலாம். கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், அதன் உயர்வு நவிற்சி வெளிப்பாடுகள் எல்லாம் என் ரசனைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. திருக்குறளை ஏற்கும் மனம் ராமாயணம் போன்ற பெருங்காவியங்களை ஏற்பதில்லை.
ஆனால் இசையில் மெட்டல் ராக்கை எத்தனை ஆர்வத்துடன் கேட்கிறேனோ அதிலிருந்து சற்றும் குறையாக ஆர்வத்துடன் தான் ஸிம்ஃபனியையும் கேட்கிறேன்.
இந்த இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஸிம்ஃபனி இசையில் மகத்தான கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கே அறிமுகம் செய்கிறேன்.
1.Dmitri Shostakovich (1906–1975) – இவரது பதினைந்தாவது ஸிம்ஃபனி மிகவும் குறிப்பிடத் தகுந்தது.
2. Philip Glass – இவர் பெயரைக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. இவர் சுமார் பதினைந்து ஸிம்ஃபனிகளை உருவாக்கியிருக்கிறார். எனக்கு ஆகப் பிடித்த இசைக் கலைஞர் என்று ஒரே ஒரு பெயரைச் சொல்ல வேண்டும் என்றால் இவர் பெயரைச் சொல்லுவேன். இவரது மூன்றாவது, நான்காவது, ஒன்பதாவது ஸிம்ஃபனிகள் முக்கியமானவை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால் இவரது ஸிம்ஃபனிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஸிம்ஃபனி ஐந்து. அதன் லிங்க்:
Philip Glass: Symphony No.5 – Movement III “Creation of Sentient Beings”
3. John Adams : இவரது Naïve and Sentimental Music மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அதன் லிங்க்:
Adams: Naive and Sentimental Music · John Adams & Tonhalle-Orchester Zürich
4. Einojuhani Rautavaara (1928–2016) தனது இறுதிக் காலம் வரை ஸிம்ஃபனிகளை உருவாக்கினார். ஃபின்லாந்தைச் சேர்ந்தவர். இவரது ஸிம்ஃபனிகளில் ஆக முக்கியமானது ஏஞ்ஜல் ஆஃப் லைட். ஏழாவது ஸிம்ஃபனி. கடவுளோடு உரையாடுவது போல் இருக்கும். அதியற்புதமான ஆன்மீக அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய ஸிம்ஃபனி.
கேட்டுப் பாருங்கள்:
Einojuhani Rautavaara: Symphony No. 7 (“Angel of Light”) – YouTube
5. Peter Maxwell Davies (1934–2016) பத்து ஸிம்ஃபனிகளை உருவாக்கினார். கலைஞர்களின் கலைஞர் என்று சொல்லலாம்.
6. Kaija Saariaho (1952–2023) இவரது முக்கியமான ஸிம்ஃபனி:
Kaija Saariaho ‘Notes on Light’ Season 29
7. Thomas Adès (b. 1971)
இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்களில் ஃபிலிப் க்ளாஸ் பணியாற்றிய திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை ஸிம்ஃபனிக்கு நிகரானவை.
ஒருவர் ஸிம்ஃபனி உருவாக்குகிறார் என்றால் அவரது தகுதி என்ன என்பது முக்கியம். ஃபிலிப் க்ளாஸ் இசையமைத்த திரைப்படங்கள் பல திரைக்காவியங்கள் என போற்றப்படுபவை. உதாரணமாக,
Mishima: A Life in Four Chapters (1985)
The Hours (2002)
Kundun (1997)
மற்றும் ட்ராகுலா படத்துக்கு இவர் அமைத்த இசை ஃபிலிப் க்ளாஸின் மேதமைக்கு ஒரு சான்று.
மற்றபடி ஒரு தேசத்தின் கலாச்சாரத்தையே சீரழித்த சினிமாவில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன், இதை இந்த உலகத்தில் வேறு யாரும் செய்ததில்லை, இப்போது எங்களை ஆண்ட வெள்ளைக்காரனின் சபையில் போய் ஸிம்ஃபனி அமைக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ”இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது” என்று மட்டுமே சொல்ல முடியும். வேறு என்ன செய்ய?
என் வாழ்நாளுக்கான அனுபவத்தின் சாரத்தை இங்கே உங்கள் விரல் நுனியில் வடித்துக் கொடுத்திருக்கிறேன். இந்தக் குறிப்புகளைப் பின் தொடர்ந்தால் இதையெல்லாம் கேட்டு முடிக்க ஒரு வாழ்நாள் போதாது. எனவே இந்தக் குறிப்புகளை இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மேற்கத்திய சாஸ்த்ரீய இசைக்கான வழிகாட்டியாகக் கொள்ளுங்கள்.
சந்தா/நன்கொடை அனுப்பி வையுங்கள்.
வங்கி விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai