27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி

நகிஸா ஓஷிமாவின் இயக்கத்தில் 1976இல் வெளிவந்த In the Realm of the Senses என்ற திரைப்படத்தை transgressive இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அனைவருமே பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.  அச்சு அசலாக ஒரு நீலப்படம் பார்ப்பது போலவே இருக்கும்.  ஆனால் நீலப்படம் அல்ல என்பது பார்வையாளருக்கு திரைப்படம் ஆரம்பித்ததுமே தெரிந்து விடும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் சில கெய்ஷாக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கே தரையில் விழுந்து கிடக்கும் ஒரு கிழவனைப் பார்க்கிறார்கள். … Read more

மார்க்கி தெ ஸாத் – தொடர்ச்சி

பின்வரும் கட்டுரை சென்ற மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. கட்டுரை எண்: 26. ஆக, இருபத்தாறு கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்துக்குக் காரணமாக இருந்தவர் அராத்து. தயிர்வடை சென்ஸிபிலிட்டியில் தொடங்கினோம். ஆனால் புத்தகத்தின் தலைப்பு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அது ஒரு மாதிரி பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் மாதிரி தொனிக்கிறது. உடலை முன்வைத்து ஒரு தத்துவ விசாரணை என்பது மாதிரியான தலைப்பாக இருந்தால் … Read more

The Existential Weight of Spoons – 6

ஒருமுறை அல்ல, பலமுறை சொன்னான் விஷால்.  வைதேகியை விவாகரத்து செய்து விடுங்கள்.  அது பற்றி பெருமாள் அவனிடம் விரிவாக விளக்கியும் விஷாலுக்கு பெருமாளின் நிலைப்பாடு புரியவில்லை.  பிறகு அது ஒரு துன்பமாகப் போகவே நட்பைத் துண்டித்தான். மிகவும் சுருக்கமாகச் சொன்னால், பெருமாளைப் போன்ற அதிர்ஷ்டக்கார எழுத்தாளன் இந்த உலகத்திலேயே இல்லை.  எழுத்துக்கு ஆதாரமான விஷயம் என்ன?  கட்டுப்பாடற்ற சுதந்திரம்.  இந்த விஷயத்தில் பெருமாளைப் போல் சுதந்திரத்தை அனுபவிப்பவன் யாருமேயில்லை. இதைப் படிப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டு … Read more

ஜப்பான் – 2

சென்ற ஆண்டு தோக்யோவில் ரொப்பங்கியில் ஒரு பப்பில் நான் சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுடைய தொலைபேசி எண் என் தோக்யோ நண்பரிடம் இருக்கிறது. சந்தித்தால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான். இந்தப் பாடலுக்கு அவளுடன் ஒரு டான்ஸ் ஆட வேண்டும். சம்போகத்தை விட இன்பமானது நமக்குப் பிடித்த பெண்ணோடு ஆடுவது. என்னவோ தெரியவில்லை, நம்முடைய நெருங்கிய தோழிகளோடு ஆட வாய்ப்பதில்லை. எல்லோரும் தம்முடைய பாடி கார்டோடு வருகிறார்கள். எங்கே ஆடுவது? சம்போகத்தை … Read more

The Existential Weight of Spoons – 5

இன்று காலை பெருமாள் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்ததால் இதையும் நாவலில் சேர்க்கலாம் என்று பார்க்கிறேன்.  எனக்கு சுவாரசியம், உங்களுக்கு அசுவாரசியமாகவும் இருக்கலாம்.  கடந்து விடுங்கள். பெருமாளுக்கு அன்பு என்றால் பிடிக்காது.  ஏனென்றால், அவன் மீது அன்பு செலுத்துபவர்களால்தான் அவன் மன உளைச்சல் அடைகிறான்.  பெரிய உதாரணம், வைதேகி.  அவள் அவன் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால்தானே அவனைக் குடிக்கக் கூடாது என்றும், கொக்கரக்கோவுடன் சேராதே என்றும் வம்பு பண்ணுகிறாள்?  அப்படி பெருமாள் மீது அன்பு கொண்டவனாக … Read more

The Existential Weight of Spoons – 4

உங்களுக்குக் கர்மா தியரியில் நம்பிக்கை இருக்கிறா என்று தெரியாது, ஆனால் பெருமாளுக்கு இருக்கிறது. நம்பிக்கை மட்டும்தான்.  ஆதாரம் கேட்டால் அவனால் தர முடியாது.  அந்த நம்பிக்கையினால்தான் அவனுக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது என்று அவன் நம்புகிறான். அநேகமாக முக்கால்வாசி இந்தியர்களும் அவனைப் போல்தான் இல்லையா?  இல்லாவிட்டால் இந்த ஒட்டு மொத்த தேசமே பைத்தியக்காரர்களால்தான் நிரம்பியிருந்திருக்கும்.  அப்படி என்ன பிரச்சினை?  உங்களுக்கே இதற்குள் தெரிந்திருக்குமே?  பூனைகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருமாள் வசித்த குடியிருப்புக்கு நேர் எதிரே … Read more