எதுயெது முதல்முதல் (தொடர்ச்சி)


புள்ளிமானைப் போல்
துள்ளிக் குதித்தபடியே
நடக்கிறாய்
இது முதல்

எப்போதும்
வெண்கல மணியாகக்
கலகலத்துச் சிரிக்கிறாய்
இது முதல்

கலவி முடிந்து
ஒருநாள்
குலுங்கிக் குலுங்கி
அழுதாய்
பதறிய நான்
நீ அடங்கியதும்
கேட்டேன்
‘பரவசத்தின் உச்சத்தை
இப்படித்தான்
வெளிப்படுத்த முடிந்தது’
என்றாய்
அது முதல்

ஒருநாள்
முழுதினமும்
என்னோடு இருந்தாய்
நள்ளிரவில் விழிப்புக் கண்டு
பார்த்த போது நீ இல்லை
குலுங்கிக் குலுங்கி
அழுதேன்
அது முதல்

தேனினும் இனிதுநின்
நிதம்பச் சுவை
அது முதல்

மோகமுள் யமுனா
இசையின்
பரவசத் தருணமொன்றில்
சொல்கிறாள் எனக்கு
செத்துவிடத் தோன்றுகிறதென்று
உன்னை நினைக்கும்
போதெல்லாம் எனக்கும்
அப்படியே தோன்றுகிறது
இன்பத்தின் உச்சம் நீ
இன்பத்தின் உச்சம் நீ
இன்பத்தின் உச்சம் நீ
இது முதல்
இது முதல்
இது முதல்