ஒரு சட்ட உதவி

சட்டம் பயின்றவர்கள் உதவி செய்யக் கோருகிறேன். மிகவும் முக்கியம். நான் குடியிருப்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. ரெசிடென்ஷியல் ஏரியா. இங்கே தரைத் தளத்தில் வெய்ட் ரோஸ் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இப்போது அதை எடுத்து விட்டார்கள். இப்போது அங்கே இன்னொரு ஷோ ரூம் வருவதற்காக தினமும் காலை ஏழு மணியிலிருந்து இரவு 10 மணி வரை டங்க் டங்க் என்று இடித்துக் கொண்டும், சுவரில் ட்ரில்லிங் மெஷின் கொண்டு துளைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பத்து பிஹாரி தொழிலாளிகள். அவர்களுக்குத் தமிழ் ஒரு வார்த்தை தெரியவில்லை. மேலும் அவர்களிடம் சொல்லி என்ன பயன்? அந்த இடத்தின் முதலாளி என் பக்கத்து ஃப்ளாட். அவரிடம் சொன்னால் முறைக்கிறார். எப்போதும் என்னைப் பார்த்து வணக்கம் சொல்பவர் இப்போது வணக்கத்தை நிறுத்தி விட்டார். இப்போது என் கேள்வி சிம்பிள்:

ரெஸிடென்ஷியல் ஏரியாவில் கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் வைக்கலாமா? வைத்தால் அங்கே குடியிருப்பவருக்கு இப்படிப்பட்ட துன்பத்தைக் கொடுக்கலாமா? இருபத்து நாலு மணி நேரமும் என் பின் மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது என்று புலம்புகிறாள் அவந்திகா. என்ன செய்யலாம்? சட்டம் என்ன சொல்கிறது? இன்னும் ஒரு மாதம் இந்த வேலை நடக்குமாம்.