பூலோக சொர்க்கம் – 2

இருபத்தைந்து வயது வரை என் வாழ்க்கை பேரரசனின் வாழ்க்கையாக அமைந்தது.  அதிலிருந்து நாற்பது வயது வரை தெருநாய் வாழ்க்கை.  நாற்பதிலிருந்து எழுபது வரைதான் ஓரளவுக்கு என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.  ஒரே ஒருமுறை என் மகனுக்காக என் நண்பரிடம் கடன் வாங்க நேர்ந்தது.  சொன்ன தேதியில் மகன் பணத்தைத் திருப்பவில்லை.  அது கூடப் பரவாயில்லை.  அது பற்றி அவன் என்னிடம் பேசவும் … Read more

பூலோக சொர்க்கம் – 1

1. என் வருமானத்தைத் தாண்டி எனக்குப் பணம் தேவைப்படுவது என்னுடைய பயணங்களுக்காகத்தான். ஏன் பயணம் செய்ய வேண்டும்?  பயண நூல்களைப் படித்தால் போதாதா? போதாது.  ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்தே ஆக வேண்டும்.  ஆயிரம் பயண நூல்களைப் படித்தாலும் நமக்கே நமக்கென்று கிடைக்கும் அனுபவங்கள் தனியானவை. ஒரு ஜப்பானிய உதாரணத்தைச் சொல்கிறேன். இந்த முறை நான் ஜப்பான் சென்றது இரண்டாவது தடவை.  சென்ற ஆண்டும் அக்டோபரில்தான் சென்று வந்தேன்.  இந்த முறையும் அப்படித்தான்.  இந்த முறை இரண்டு … Read more

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (கதை மாதிரி ஒரு கட்டுரை)

இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த ஒரே பாடகர் யார் என்று கேட்டால், ஒருசிறிதும் யோசிக்காமல் வெங்கடேஷ் குமார் என்பேன்.  நேரில் கேட்டதில்லை.  ஹிந்துஸ்தானியில் அவர்தான் இன்று உச்ச நட்சத்திரம் என்று நினைக்கிறேன்.  முன்பு அந்த இட்த்தில் என் உலகில் இருந்தவர் பண்டிட் ஜஸ்ராஜ்.  பண்டிட் ஜஸ்ராஜை நேரில் ஒரு ஐம்பது முறை கேட்டிருக்கிறேன்.  தில்லியில் இருந்ததால் கிடைத்த அதிர்ஷ்டம்.  ஒரே ஒரு முறையாவது வெங்கடேஷ் குமாரை நேரில் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.  அது நடக்காது என்றும் தெரிந்திருந்தது.  … Read more

சித்த மருத்துவர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா – இடம்: தி.நகர் சோஷியல் கிளப்

வரும் ஞாயிறு (17.11.2024) மாலை 5.30 மணி அளவில், சித்த மருத்துவர் பாஸ்கரனின் புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தில் ஒரு சிறிய மாற்றம். இப்போதைய அரங்கம் முன்னதை விட வசதியானது. இடம்: தி.நகர் சோஷியல் க்ளப், 1, நாகேஸ்வரன் ரோடு, பனகல் பார்க் அருகில். அழைப்பிதழ் கீழே. அனைவரையும் வரவேற்கிறேன்.

இதுவரை சொல்லாத ரகசியம்…

ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை அமெரிக்க லெஸ்பியன் மற்றும் ட்ரான்ஸ்கிரஸிவி எழுத்தாளர் Kathy Ackerக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். நீங்கள் எங்கெல்லாம் கேத்தியின் பெயரைத் தொட்டாலும் என் பெயரும் கூடவே வரும். கேத்தியின் வாழ்க்கை மிகவும் புரட்சிகரமானது. கலகத்தன்மை கொண்டது. அவள் அளவுக்குக் கலகம் செய்த பெண் எழுத்தாளர்கள் கம்மி. ஆனால் அவள் எழுத்து மிகவும் சலிப்பூட்டக் கூடியதாக இருக்கும். எனவே கேத்தி ஆக்கர் என்ற பெண் ஆளுமை, அவளது கலகம் எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவள் எழுத்து … Read more

சித்த மருத்துவம் – சென்னையில் ஒரு விழா – அடியேனின் உரை

சித்த மருத்துவம் பற்றி நீண்ட காலமாக எழுதி வருகிறேன். எழுதுவதோடு மட்டும் அல்லாமல் என் உடலை வைத்தே பல பரிசோதனைகளையும் செய்திருக்கிறேன். அது குறித்து என் நாவல் எக்ஸைலில் விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது என் நண்பரும் சித்த மருத்துவருமான டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் என்ற நூல் 17.11.2024 அன்று வெளிவர இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். என் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் விழாவுக்கு வரும்படி அழைக்கிறேன். விழாவில் சித்த மருத்துவம் … Read more