கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம்.
நவீன தமிழிலக்கியம், உலக சினிமா, உலக இலக்கியம், அதிகம் கண்டுகொள்ளப்படாத டிரான்ஸ்கிரஸிவ் லிட்ரேச்சர், அரபி இலக்கியம், உலக அரசியல் என கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தளம் உலகத் தமிழர்களுக்கு வழங்கியது ஏராளம். ஒரு பல்கலைக் கழகம் அல்லது தமிழிலக்கிய ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பெரு அறிவுசார் துறைகள் செய்ய வேண்டியதை ஒற்றை ஆளாக சாரு நிவேதிதா செய்து வந்திருக்கிறார். கடந்த 25 வருடங்களாக இந்தத் தளம் எந்தக்கட்டணமும் இன்றி இலவசமாகவே இயங்கி வருகிறது. இலக்கிய எழுத்தாளர்களுக்கு தமிழ்ச்சூழலில் எந்த வருமானமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். பணம் கிடைக்கும் திரைத்துறையிலும் சாரு நிவேதிதா இயங்கவில்லை. நாவல் , சிறுகதை, கட்டுரை, கவிதை என தீவிர இலக்கியத் தளத்தில் மட்டுமே இயங்கி வருபவர்.
ஒழுங்கான பண வசதி, தொழில்நுட்ப உதவிகள் இல்லாத காரணத்தால் ஆரம்பகாலத்தில் எழுதிய பல பதிவுகள் இந்த வலைப்பக்கத்தில் இருந்து காணாமல் போய்விட்டன. இப்போதும் இந்தத் தளம் நவீன கால தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இயங்குவதாகச் சொல்ல முடியாது. இதில் கொட்டிக்கிடக்கும் விஷயங்கள் மாணிக்கக் கற்கள் போன்றவை, விலை மதிக்க முடியாதவை. ஆனால் அந்த மாணிக்கக் கற்கள் ஒரு பழைய டிரங்கு பெட்டிக்குள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தத் தளம் இயங்கி வருகிறது.
ஒரு பிரபல நடிகர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் 100 கோடி. ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் தன் அறுபது வயதில் ஒரு நாவலுக்குப் பெறும் ராயல்டி வருடம் சுமார் 50,000 /- வரலாம். அதுவும் அடுத்த வருடம் 20,000 க்குக் கீழே இறங்கி விடும். இப்படி இருக்கும் தமிழ்ச்சூழலில் இதுவரை சாரு நிவேதிதா அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான வாசகர்களின் ஆதரவில் மட்டுமே இயங்கி வருகிறார். சமீபத்தில் அவர் மேற்கொண்ட சீலே பயணம் முழுவதுமே இதைப்போன்ற நெருக்கமான வாசகர்களால் மட்டுமே சாத்தியமானது. சீலேவுக்குச் சென்ற முதல் தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதாவாகத்தான் இருப்பார்.
சாரு நிவேதிதா பயணம் செல்வதே எழுதுவதற்காகத்தான். அந்தப் பயண அனுபவத்தில் தான் பெற்றதை இந்தத் தமிழ் சமூகத்துக்கு கொடுக்கத்தான். துருக்கி , லெபனான் என சமீபத்தில் சென்று வந்த பயணங்கள் எல்லாம் நூல்களாக வெளிவந்துள்ளன. அவை பெரும் வாசகப் பரப்பை அடைந்து புதிய திறப்புக்களை உண்டாக்கியுள்ளன.
68 வயதாகும் சாரு நிவேதிதா 25 வயதில் எழுத ஆரம்பித்தவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. பல கட்டுரைகள் வலைத்தளத்தில் இருந்து இன்னும் நூல்களாகத் தொகுக்கப்படாமல் உள்ளன. தற்போது அவர் பிஞ்ச் ஆப்பில் எழுதி வெளிவந்துகொண்டிருக்கும் “நான்தான் ஔரங்கசீப்…“ ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். இதற்கு அவர் வாங்கிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் புத்தகங்களின் விலை மட்டுமே சில லட்சங்களைத் தாண்டும். இதற்காக அவர் படித்த பக்கங்கள் அந்த விலையையும் தாண்டும்.
இந்த வயதிலும் ஒரு இளைஞனைப் போல இன்னும் பல புதிய படைப்புகளைத் திட்டமிட்டு வருகிறார். அவையெல்லாம் பெரும் உழைப்பையும், அதிக நிதியையும் கோருபவை. பெரும்பாலான பணம் புத்தகங்கள் வாங்கவும், பயணம் செய்யவுமே தேவைப்படுகிறது.
தமிழ் இலக்கிய உலகில் ரகசியமாக நிறுவனங்களையோ, பெருந்தனக்காரர்களையோ நாடாமல், வெளிப்படையாக, நேரடியாக வாசகர்களிடம் கோரிக்கை வைத்தவர் சாரு நிவேதிதா. இதற்காக சக எழுத்தாளர்களிடம் இருந்தே அதிக பட்ச ஏளனங்களையும் அவமதிப்பையும் எதிர்கொண்டவர். சாருவின் வாழ்வில் எல்லாமே வெளிப்படைதான். பூனை உணவுக்குப் பணம் வேண்டும் என்றால், பூனை உணவுக்குப் பணம் கொடுங்கள் என்பார். ரெமி மார்ட்டினுக்குப் பணம் வேண்டும் என்றால் ரெமி மார்ட்டினுக்குப் பணம் கொடுங்கள் என்பார்.
இப்போது இந்தத் தளத்தை மேம்படுத்தவும், உலக அளவில் பயணம் மேற்கொண்டு எழுதவும், பல புத்தகங்கள் வாங்கவும் நிதி தேவைப்படுகிறது. பூனை உணவு போன்ற பூனை உலக லௌகீக விஷயங்களை எல்லாம் நண்பர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தத் தளம் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட உள்ளது. இந்தத் தளத்தில் உலக சினிமா, உலக இலக்கியம் என பல்வேறு விஷயங்களை எழுத இருக்கிறார். இனி வரும் காலத்தில் விடியோவிலும் தொடர் செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பின் மூலமே இவை அனைத்தும் நடந்தேறும். இதுவரை அப்படித்தான் நடந்து வந்தது, இனியும் அப்படியே…
இந்தத் தளம் மற்றும் புதிதாகத் தொடங்கவுள்ள யூடியூப் சேனல் தொடர்ந்து கட்டணமின்றி இயங்கும். மாணவர்கள், குறைந்த ஊதியம் பெறுபவர்கள் (குறைந்த ஊதியம் என்றால் , சாரு நிவேதிதா அகராதியில் ரூ 40,000), ஹோம் மேக்கர்ஸ் இவர்களிடம் இருந்து பணம் பெறுவது சாரு நிவேதிதாவுக்கு உவப்பானது அல்ல. அதை மறுக்கவும் செய்வார். மற்றவர்கள் தங்களால் இயன்றதை அவ்வப்போது அல்லது மாதம் ஒரு முறை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும் அறிவுத்தள செயல்பாட்டுக்கும், நவீன இலக்கியத்திற்காகவும் என்பதை மறந்து விட வேண்டாம். ஒரு அரசும், பெரிய நிறுவனங்களும் செய்ய வேண்டியதை, செய்ய மறந்ததை வாசகர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள்.
பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ் உரைநடையை நவீனப்படுத்திய ஒருவருக்குத் தோள் கொடுக்கிறீர்கள்.
சாரு நிவேதிதா சமரசம் இன்றி எழுதுபவர் என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. யார் உதவி செய்யாவிட்டாலும் அது அப்படியே தொடரும். அவர் தன்மை மாறாது. அந்த சமசரமற்ற தன்மையுடனான எழுத்துக்கள் இன்னும் அதிக அளவில் வருவதற்கு நாமும் அதில் பங்குகொள்கிறோம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி அடைபவர்களை உடன் பயணிக்க அழைக்கிறோம்.
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com