கடந்த காலம்

முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். மெரினா கலங்கரை விளக்கத்தின் கீழே அந்தப் பெண்ணின் காரில் கென்னி-ஜியைப் போட்டு விட்டு, காரிலிருந்து இறங்கி நின்று கொண்டே ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை சர்வதேச இசை பற்றிப் பேசிக்கொண்டிருப்பேன். பத்து ஆண்டுக் கால நட்பு. பிறகு என் எழுத்தின் மீது குற்றம் சாட்டி விட்டுப் பிரிந்து விட்டாள். நண்பர்களுக்காக எழுத்தில் சமரசம் செய்து கொள்ள முடியுமா? பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். வாரம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து விடுவாள். அவந்திகா … Read more

கார்ல் மார்க்ஸின் பீச்: வெளியீட்டு விழா

வரும் சனிக்கிழமை பீச் நாவலை முன்வைத்து இலக்கியத்தில் நாவல் வடிவம் பற்றிப் பேச இருக்கிறேன். இது ஒரு முக்கியமான உரையாக இருக்கும். நேரில் கேட்டுப் பயன் பெறுங்கள்.

சத்திய சோதனை மற்றும் தியானம் : ஓர் எதிர்வினை : நிர்குண்

சத்தியசோதனை, தியானம், மற்றும் சமூக சீர்திருத்தம் — ஒரு நிர்குண் பார்வை(சாரு நிவேதிதாவின் Cகட்டுரைக்கு எதிர்விமர்சனம்) சமூக வன்முறையைப் பற்றிய சாரு நிவேதிதாவின் கவலை உண்மையானது. ஆனால் அவர் முன்வைக்கும் தீர்வுகள் — சத்தியசோதனை வாசிப்பு, தியானம், கர்நாடக இசை பயிற்சி — நிர்குண் பார்வையில் மனிதனை மாற்றும் கருவிகள் அல்ல; மனிதன் தன்னைப் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனைகளை மாற்றும் கருவிகள் மட்டுமே.— 1. தியானம்: கற்பனையை மாற்றும் பயிற்சி, மனிதனை மாற்றும் பயிற்சி அல்ல … Read more

சத்திய சோதனை மற்றும் தியானம் (2)

மிருகங்களை நேசிக்கும் நீங்கள் மனித மிருகங்கள் என்று எதிர்மறையான அர்த்தத்தில் சொல்லலாமா? சுபாஷிணி, சென்னை பதில்: சொல்லக் கூடாதுதான். ஆனால் அந்த நான்கு கிரிமினல்களையும் வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மிருகங்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை. பசிக்காக மட்டுமே அவை மற்ற மிருகங்களை வேட்டையாடித் தின்கின்றன. மற்றபடி மனித இனத்திடம் உள்ள எதிர்மறையான விஷயங்கள் எதுவும் மிருகங்களிடம் இல்லை. எனவே என் வார்த்தைகளில் அதிக கவனம் கொடுக்காமல் அதன் உள்ளே ஊடாடி இருக்கும் அர்த்தத்தை மட்டும் பெற்றுக் … Read more

சத்திய சோதனை மற்றும் தியானம்

அந்த நான்கு மனித மிருகங்களின் மீதும் பொதுஜனம் தனது உச்சபட்ச வெறுப்பைக் காண்பித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தப் பொதுஜனத்துக்கும் அந்த நான்கு மனித மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  ஏனென்றால், இதே மாதிரி பொதுஜனம்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் தொண்ணூறு லட்சம் யூதர்களை இதேபோல் சித்ரவதை செய்து கொன்றது.  இப்போது அறச்சீற்றம் காட்டும் இந்தியப் பொதுஜனமும் ஜெர்மானியப் பொதுஜனத்திடமிருந்து சிறிதும் வேறுபட்டதல்ல.  குஜராத்தில் நடந்த படுகொலைகளை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.  சமீபத்தில் கூட தெருநாய்களைப் பிடித்து பட்டியில் … Read more