பீச்: கார்ல் மார்க்ஸ்

வருகின்ற ஜனவரி மூன்றாம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மபாலிடன் கிளப்பில் கார்ல் மார்க்ஸின் இரண்டாவது நாவலான பீச் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இன்னும் எனக்குக் கிடைக்காததால் சரியான நேரம் தெரியவில்லை. வெளியீட்டு விழாவில் நானும் பேசுகிறேன். நாவலை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். முன்னுரையில் கார்ல், வாசிப்பு இன்பம் பற்றிச் சொல்லியிருப்பதாலும், நாவலை அடியேனுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாலும் நாவலை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நான் எழுதியிருந்த எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் … Read more

புத்தாண்டு வேண்டுதல்

முன்னொரு காலத்தில் ஸ்ரீகிருஷ்ணனாய் வாழ்ந்தேன் பிறகு என் TOV ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய் மாற்றியது இப்போது TOV உச்சத்தில் நின்று என்னை ஆஞ்சனேயனாய் மாற்றி விட்டது மன உளைச்சலில் பைத்தியம் பிடிக்கிறது பெருமாளே, என்னைச் சடுதியில் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணனாய் மாற்று!

திருத்தத்துக்கு ஒரு திருத்தம்: நிர்குண்

சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம்!### ? RASPUTINNIRGUNA – The Ritual of the Unmeasured The ache of love cannot be mapped by statistics— it is a pulse without blood. To follow numbers is to bathe a corpse; a ritual of cleansing what never breathes, painting grief on lifeless data. Love is always an unmeasured dark— an uncounted tremor, … Read more

திருத்தம்

சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம்! உங்களது வலைப்பக்கத்தில் “புகைப்படம் என்ற கலாச்சார அடையாளம்” என்று தலைப்பிட்ட கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் இப்படிக் குறிப்பிட்டுள்ளீர்கள்: “ஆனால் மிகச் சமீபத்தில் வாழ்ந்த பாரதிக்கு ஒரே ஒரு புகைப்படம்தான் உள்ளது“.ஆனால் உண்மையில், பாரதியின் ஆறு புகைப்படங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்றதாய் பாரதி ஆய்வாளார்கள் கூறுகின்றனர். தி ஹிந்து நாளிதழ் நடத்திய “The Hindu Lit for Life 2017”-ல் அதைப்பற்றிய ஒரு காணொளியின் சுட்டி இங்கே: https://www.youtube.com/watch?v=GZ1yQqyxSbI (காணொளியில் படங்களை 42:08 முதல் காணலாம்). இவை இருந்தும், பொதுவாக நாம் பார்க்கும் படங்களில், ‘குங்குமப் பொட்டு’ வைத்த, ‘சாந்த … Read more