வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் – 2000ஆம் ஆண்டில் – நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே இருப்பது. இதுபோல் வரப் போகும் புத்தக விழாவில் பத்து புத்தகங்கள் வர இருக்கின்றன. அந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசிக்கும்போது இப்போது நான் கனிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும் என்ற கட்டுரையிலிருந்து ஒரே ஒரு பகுதியை கீழே தருகிறேன். இந்தக் கட்டுரை 2000இல் எக்ஸில் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. எக்ஸில் … Read more

வெங்கடேஷ் குமார்

வெங்கடேஷ் குமாரின் வயது 71. இந்த வயதில் அவர் பெயர் உலகமெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கிஷோரி அமோங்கர், கங்குபாய் ஹங்கல் அளவுக்கு இன்று பாடக் கூடிய ஒரே நபராக இருப்பவர் வெங்கடேஷ் குமார். ஆனால் அவரது எளிமையான குணத்தின் காரணமாக அவர் பெயர் எந்த அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னொரு காரணம், வெங்கடேஷ் குமாரின் தியாக மனப்பான்மை. இருபது ஆண்டுகள் அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் … Read more

க்ராஸ்வேர்ட் வாக்களிப்பு – இன்னும் இரண்டு தினங்கள்

ஆட்டா கலாட்டா சிறந்த நூல் போட்டியின் நெடும்பட்டியலில் இடம் பெற்ற Conversations with Aurangzeb குறும்பட்டியலில் இடம் பெறவில்லை. என் வாழ்வில் இது சகஜம்தான் என்பதால் ஆச்சரியம் இல்லை. க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் Conversations with Aurangzeb நாவலுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் முறை மிகவும் எளிது. Translation categoryக்கு சென்று ஔரங்ஸேப் நூலில் டிக் அடிக்க வேண்டும். ஓடிபி வரும். அதைப் பூர்த்தி செய்தால் வாக்கு அளித்ததாக அர்த்தம். வாக்கு … Read more

சித்த மருத்துவர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா

கடந்த ஞாயிறு (17.11.2024) அன்று மாலை தி.நகர் சோஷியல் கிளப்பில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.  சுமார் நானூறு பேர் வந்திருந்தார்கள்.  இன்னும் சற்று பெரிய அரங்காக இருந்திருந்தால் வந்திருந்த இன்னும் நூறு பேருக்கு இடம் கிடைத்திருக்கும்.  இடம் இல்லாததால் சுமார் நூறு பேர் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  உண்மையில் அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.  இத்தனை கூட்டத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  பாஸ்கரனுக்கு இவ்வளவு நண்பர்கள் … Read more

ஏ.ஆர். ரஹ்மான்

என் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். எத்தனையோ பேர் என் மனதுக்கு உகந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலரது சந்திப்பு ஒரே ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. சிலரைத் தொடர்ந்து சந்திக்க வாய்க்கிறது. சில நண்பர்களுடன் மிக நெருக்கமான அளவில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நட்பில் இருக்கிறேன். முப்பத்தைந்துதான் அதிக பட்சம். முப்பத்தைந்துக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் அதிகம் கூட இருக்கும். நான் சந்தித்த மனிதர்களில் முக்கியஸ்தர்களும் அடக்கம். பிரபலம் என்ற வெளிச்சம் விழாதவர்களும் அடக்கம். இப்படி நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை ஆகக் … Read more

இன்று மாலை டாக்டர் பாஸ்கரன் புத்தக வெளியீட்டு விழா

இன்று மாலை ஐந்தரை மணி அளவில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். எல்லோரும் வரலாம். அழைப்பிதழ் கீழே. இடம் டி.நகர் சோஷியல் கிளப், நாகேஸ்வரன் ரோடு, சென்னை.