பெங்களூரில் வரும் 9, 10, 11, 12 நான்கு தினங்கள் இருப்பேன். ஒன்பதாம் தேதி இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூர் வந்து சேர்கிறேன். மாலையில் கிளம்பும் வந்தே பாரத் ரயில். பன்னிரண்டாம் தேதி இரவு என்னை சாவகாசமாகச் சந்திக்கலாம். இப்போதும் கோரமங்களாவில் எண்பதடி சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்குவேன். பன்னிரண்டாம் தேதி Indian Institute of Human Settlements விடுதியில் தங்குவேன். மறுநாள் மதியம் பேச வேண்டியிருப்பதால் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது. பத்தாம் தேதி மாலை மட்டும் ஒரு நண்பரை சந்திக்கிறேன். அது தவிர ராம்ஜியும் (ஸீரோ டிகிரி பதிப்பகம்) பெங்களூர் வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
அடுத்த பயணம் முக்கியமானது. அதுதான் உண்மையான பயணம். மே இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து காரில் கிளம்பி மலைப்பாதையிலேயே காந்தளூர் வரை செல்கிறோம். ஜூன் மூன்று அல்லது நான்காம் தேதி காந்தளூரில் என்னை சந்திக்க நினைப்பவர்கள் சந்திக்கலாம். இந்தியாவில் நான் அதிகமாக சாலைப் பயணம் சென்றதில்லை. சென்ற போதும் சோர்வடைந்து விடுகிறேன் என நண்பர்கள் சொன்னார்கள். இனிமேல் சோர்வடைய மாட்டேன். காரணம், மருத்துவர் பாஸ்கரன். அவர் ஏதோ ஒரு மூலிகைப் பொடி கொடுத்திருக்கிறார். அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பயங்கர சுறுசுறுப்பாகி விடுகிறது.
பெங்களூர் IIHS சந்திப்புக்கு வருவதாக பாஸ்கரன் சொல்லியிருக்கிறார். பெங்களூரில் அவரைச் சந்திக்க பலரும் விரும்புகிறார்கள் என்பதால் ஒருநாள் பெங்களூரில் தங்கி அவரைச் சந்திக்க விரும்புபவர்களைச் சந்திக்க இருக்கிறார். சமீபத்தில் என் வாசகர் ஒருவர் பாஸ்கரன் மூலம் குணம் பெற்றார். வாசகருக்கு ஈரல் பழுதாகி விட்டது. ஒரு பெரிய மருத்துவமனையில் ஈரல் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு ஆனது. இன்னொரு ஈரலின் ஒரு பகுதியை வைக்கிறார்கள். 70 லட்சம் கட்டணம். வாசகர் ஒரு மாதம் கெடு கேட்டு பாஸ்கரனை சந்திக்கிறார். பாஸ்கரன் மூலிகை மருந்துகளைக் கொடுக்கிறார். உச்ச மருந்துகள் என்பதால் 5000 ரூ. ஒரு மாதம் மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு ஆங்கில மருத்துவமனைக்குச் சென்றார் வாசகர். அறுவை சிகிச்சை வேண்டாம், உங்கள் ஈரல் சரியாகிக்கொண்டு வருகிறது என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். என் வாசகர் என்னிடம் சொன்னது இது.
காந்தளூரை மறந்து விடாதீர்கள். கார் பயணத்திற்கு நண்பர்கள் ஏற்பாடாகி விட்டது. என்னைத் தவிர மற்றும் மூன்று பேர் தயாராக இருக்கிறார்கள்.
பெங்களூர் Indian Institute of Human Settlements சந்திப்பு பற்றி வேறொரு பதிவில் எழுதியிருக்கிறேன். அதைப் பார்த்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. முன்பதிவு செய்து விட்டு கலந்து கொள்ளலாம். அந்த சந்திப்புக்காக இப்போதிருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன்.
மருத்துவர் பாஸ்கரன் தொடர்பு முகவரி:
Admin Office Landline
+91 44 47703789 (Please call 10 am to 5 pm only)
Admin Office Mobile
+91 78711 77789 (Please call 10 am to 5 pm only)
WhatsApp Chat
+91 78711 77789 (You can send enquiry message at anytime, reply will be given during office hours – 10 am to 5 pm only)