எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – அரவிந்த் வடசேரி

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் குறித்து அரவிந்த் வடசேரி எழுதிய கட்டுரை ஆவநாழி இதழில் வெளியாகியுள்ளது.

தாயே!

இதுவரை இப்படி நின்றதில்லை எப்போதும் என் உடலை பொய்மேகங்களால் மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன் சமயங்களில் மேகம் கலைந்து என் மேனியின் சில துளிகள் தெரிந்ததுண்டு அதைக் கண்டு பரிகசித்தோர், அவமதித்தோர் பலருண்டு இப்போது மோகினிக்குட்டீ உன் முன்னே மேகம் கலைத்து நிர்வாணம் கொண்டு நிற்கின்றேன் ஏன் இதுவரை பொய்மேகம் அணிந்தாய் என்கிறாய் தெரியவில்லையே தாயே யோசி யோசி யோசி ’என் நிர்வாணம் கண்டு அவர்கள் பார்வை பறிபோகுமென்று அஞ்சினேன்.’ ’அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் மேகம் கலைத்தாய்?’ ‘நீயும் … Read more

நிழல்களின் கூட்டம்

மனைவியின் குடும்ப சுபவிழா ஒன்றிற்கு அவனும் சென்றிருந்தான் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி எல்லோரும் முதல் மாடியிலிருந்த மண்டபத்துக்குச் செல்வதைக் கண்டான் மத்திம வயதுக்காரர்களால்கூட இளைஞர் துணையின்றி ஏற முடியவில்லை எழுபத்து மூன்று வயதான அவனால் அந்தப் படிக்கட்டுகளில் லகுவாகவே ஏற முடிந்தது ஆண்களில் பலர் நெற்றியில் குலச்சின்னம் தரித்து மெல்லிய வேட்டியணிந்து அதனொரு பாகத்தை இடுப்பில் செருகியிருந்தார்கள் மேலே சட்டையில்லை இதைத்தான் அக்காலத்து ஐரோப்பியர் அரைநிர்வாணப் பக்கிரிகளென்றார்கள் போலும் இந்த வெய்யிலுக்கு இதுதான் உகந்த உடை தடையேதுமில்லை … Read more